Shadow

Tag: எம்.எஸ்.சுப்புலட்சுமி

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்திகள் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்திகள் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

Songs, ஆன்‌மிகம், காணொளிகள்
கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர், மறைந்த பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி, பக்திப் பாடல்களைப் பாடி நம் கண் முன்னே இறைவனைக் கொண்டு வந்து நிறுத்திய தெய்வீகக் குரலுக்குச் சொந்தக்காரர். இவர், திருமலை கோவிந்தனுக்கு வெங்கடேச சுப்ரபாதத்தைப் பாடிய இசைத்தட்டு 1963 ஆம் ஆண்டு வெளியானது. திருமாலின் புகழைப் பாடும் 'வெங்கடேச சுப்ரபாதம்' திருப்பதி தேவஸ்தானத்தில் ஒலிபரப்பு செய்தது மட்டுமின்றி, 1975 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக எம்.எஸ். சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டார். இத்தகைய சிறப்புமிக்க வெங்கடேச சுப்ரபாதத்தை இன்றைய தலைமுறையினர் மற்றும் எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்லும் நோக்கில், டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் புதிய அத்தியாயத்தைத் தொட்டுள்ளது. ஏற்கெனவே கந்த சஷ்டி கவசத்தை சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா குரலில் வெளியிட்டு 12 மில்லி...
சகுந்தலை (1940)

சகுந்தலை (1940)

சினிமா, தொடர்
(முக்கிய நடிகர்கள்: ஜி.என்.பாலசுப்ரமணியம்; எம்.எஸ்.சுப்புலட்சுமி; என்.எஸ்.கிருஷ்ணன்; டி.ஏ.மதுரம்; டி.எஸ்.துரைராஜ்) 1940 ஆம் வருஷம் தமிழ்த்திரையுலகிற்கு ஒரு முக்கியமான வருஷம். இந்த வருஷம் வெளிவந்து பெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படம் சகுந்தலை. ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் கதையை விட தலையாய அம்சமாக இருந்தது அவற்றின் பாடல்கள் தாம். புதிதாகத் தோன்றியிருந்த சினிமாவை, நாடகத்தின் தொடர்ச்சியாகவே கருதினர் அன்றைய மக்கள். பவளக்கொடி, ஸ்ரீவள்ளி போன்ற அக்கால பிரபல நாடகங்களில் பாடப்பட்டுவந்த பாடல்களினால் வெகுவாகக் கவரப்பட்டிருந்த மக்கள், அதைப் போலவே திரையிலும் எதிர்பார்த்ததன் விளைவு தான் ஆரம்பகாலப் படங்களின் ஏராளமான பாடல்களுக்கான காரணமாக இருக்க முடியும். பின்னணி பாடுவது என்கிற ஏற்பாடுகள் எல்லாம் தோன்றியிராத காலம், எனவே சினிமாவில் நடித்தவர்கள் பெரும்பாலும் பாடத் தெர...