டிஜிட்டல் தொழில்நுட்ப மெருகேற்றலில் வெளியாகும் எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’
எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்டப் பெரும் திருப்பத்தின் பொழுது வெளியான படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க.வைத் துவங்கிய பின், அக்கட்சி கொடியுடன், இப்படம் வெளியானது.
இப்படத்தில், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலைப் பிடித்து, அதை ஆக்கபூர்வப் பணிக்குப் பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின், 'பார்முலா'வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். எதிரிகளின் இந்த சதித்திட்டத்தை, விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ எப்படி முறியடிக்கிறார் என்பது தான் கதை.
முருகன், ராஜூ என இரண்டு கதாபாத்திரங்களையும் எம்.ஜி.ஆர். ஏற்று நடித்திருப்பார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என மூன்று கதாநாயகியர். நாடு, நாடாகப் பயணிக்கும் சர்வதேசக் கதையைத் திறமையாகக் கையாண்டு இருப்பார் இயக்குநர் எம்.ஜி.ஆர்.
விஸ்வநாதன் இசையில...