எம் மேல கைய வெச்சா காலி – ‘எமன்’ படப்பாடல்
விரைவில் வெளியாக இருக்கும் 'சைத்தான்’ படத்தைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘எமன்’. தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து, அதைத் திரைப்படங்களாக ரசிகர்களுக்கு வழங்கி வரும் 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த 'எமன்' படத்தை இயக்கி இருக்கிறார் 'நான்' பட இயக்குநர் ஜீவா ஷங்கர்.
'எமன்' படத்திற்காக விஜய் ஆண்டனி இசையமைத்துப் பாடியிருக்கும் 'எம் மேல கைய வெச்சா காலி' என்னும் பாடலானது வருகின்ற செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கின்றது. 'லைக்கா கோவை கிங்ஸ்' - 'சேப்பாக் சூப்பர் கில்லிஸ்' அணிகளுக்கு இடையே செப்டம்பர் ஐந்தாம் தேதி திருநெல்வேலியில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டியின் போது, இந்த' எமன்' படத்தின் பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்....