லாபம் விமர்சனம்
ஒடுக்கப்படும் பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவுக் குரலாக தமிழ்த்திரையில் எஸ்.பி.ஜனநாதனின் குரல் எப்பொழுதும் ஒலிக்கும்.
தன் படங்களின் வழியே எளிய மக்களுக்கு எதிராக இருக்கும் முதலாளித்துவத்தையும், அதற்கு துணைபோகும் அமைப்புகளையும் அரசையும் அவரது படங்கள் கேள்வி கேட்கும். லாபத்திலும் அந்தக் கேள்வியை எழுப்பி, கேள்விக்கான விடைகளை வசனங்களாக அள்ளித் தெளித்துள்ளார்.
கம்னியூசத்தை அவ்வளவு எளிதில் மக்களுக்குப் புரிய வைக்க முடியாது என்ற பொதுப்புத்தியில் சம்மட்டி வைத்து அடிப்பது எஸ்.பி.ஜனநாதனின் பாணி. எதையுமே மிக எளிதாகப் புரிய வைக்கும் வல்லமை அவரிடம் உண்டு. அதை இப்படத்தில் சற்று அதிகமாகவே முயற்சி செய்து பார்த்துள்ளார். லாபத்தைப் பற்றியும் லாபத்தில் இருந்தே அனைத்து ஊழலும் உருவாகிறது என்பதையும் ஒரு குழந்தைக்கு விஜய் சேதுபதி சொல்லிக் கொடுக்கும் காட்சி வழியாகப் படம் பார்ப்பவர்களுக்கும் புரிய வைத்துள்ளார் ஜனநாத...