Shadow

Tag: எஸ்.வரலட்சுமி

ஜகதலப்ரதாபன் (1944)

ஜகதலப்ரதாபன் (1944)

சினிமா, திரை விமர்சனம், தொடர்
(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா, டி.பாலசுப்ரமணியம், பி.பி.ரங்காச்சாரி, எம்.எஸ்.சரோஜினி, யு.ஆர்.ஜீவரத்தினம், டி.ஏ.ஜெயலட்சுமி, எஸ்.வரலட்சுமி, சாரதாம்பாள்)ஜகதலப்ரதாபன் என்றால் அனைத்துத் துறைகளிலும் கை தேர்ந்தவன் – மிகுந்த திறமைசாலி எனப் பொருள் கொள்ளலாம். இப்போது ‘சகலகலா வல்லவன்’ என்கிறோமே – அதைப்போல. நிஜ வாழ்க்கையிலும் அப்படி ஒரு ஜகதலப்ரதாபன் இருந்தார். அவர் தான் பி.யு.சின்னப்பா. தமிழ்த் திரையில் ஆரம்பகாலங்களில் நடிப்பு என்பது, திரையில் தோன்றிப் பாடுவதுடன், பிராமண மற்றும் மணிப்பிரவாள நடையில் ஒரு மாதிரி இழுத்து இழுத்துப் பேசுவதாகத் தானிருந்தது. பாகவதரின் பல படங்களில் இதைப் பார்க்க முடியும். இதே மாதிரி தான் அனைவரும் பேசியும், பாடியும், நடித்தும் வந்தார்கள். அவர்கள் மத்தியில் அருமையாகப் பாடுவதுடன், நடிப்பாற்றலிலும் வல்லவராக விளங்கிய ஒரே நடிகர் பி.யு.சின்னப்பா. எனவே தமிழ்...