Shadow

Tag: ஏ.ஆர். ரஹ்மான்

ராயன் விமர்சனம்

ராயன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
D50 எனும் தனது ஐம்பதாவது படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இது இயக்குநராக அவருக்கு இரண்டாம் படம் என்பது குறிப்பிடத்தக்கது. காத்தவராயன், முத்துவேல்ராயன், மாணிக்கவேல்ராயன் என ராயன் சகோதரர்கள் மூவர். அவர்களுக்கு துர்கா எனும் தங்கை பிறக்கிறாள். அவள் கைக்குழந்தையாக இருக்கும்போதே, அவளைத் தூக்கிக் கொண்டு ராயன் சகோதரர்கள் சென்னை வந்துவிடுகின்றனர். வளர்ந்ததும், குடிகாரரான முத்துவேல்ராயனால் ஒரு பெரும்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. அதை ஒன்றாகச் சேர்ந்து எதிர்கொள்ளும் ராயன் சகோதரர்கள், ஒரு கட்டத்தில், கதையில் எதிர்பாராத திருப்பமும், அதிர்ச்சி மதிப்பீடும் வேண்டுமெனக் கருதி தொலைந்து போகிறார்கள். படம் தொடங்கி இடைவேளை வரை நறுக்கு தெறித்தாற்போல் உள்ளது. ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருக்கும் ராயன் சகோதரர்களின் வாழ்க்கை, அந்த வாழ்விடம், முத்துவேல்ராயனுக்கும் மேகலாவுக்கும் இடையேயான காதல் என முதற்பாதி கச்சிதமா...
ஐந்து வருடங்களை  நஜீப் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணித்துள்ளேன். – ப்ருதிவிராஜ்

ஐந்து வருடங்களை நஜீப் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணித்துள்ளேன். – ப்ருதிவிராஜ்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
பிராந்தியத்தை தாண்டி, மாநில எல்லையை தாண்டி இந்திய நடிகர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் படத்திற்கு விளம்பரம் செய்து உதவுவது மிகவும் ஆரோக்கியமான விஷயம். அந்த வகையில், ரசிகர்கள் நீண்ட நாட்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் தேசிய விருது பெற்ற பிளெஸி இயக்கத்தில், பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள ‘தி கோட் லைஃப்’ படத்தின் முதல் பார்வையை ’பாகுபலி’ மூலம் இந்திய ரசிகர்கள் எல்லோர் மனதையும் கவர்ந்த நடிகர் பிரபாஸ் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஏப்ரல்10, 2024 அன்று வெளியாகிறது. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை மிகப்பெரிய சர்வைவல் அட்வென்சர் என்கிறது படக்குழு. இதுபோன்ற சர்வைவல் அட்வென்சர் கதைகள் இந்திய சினிமாவில் அரிதாகவே வருகிறது. அதுவும் இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்பது இந்தப் படத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. இந்தப் படத்தின் முதல் பார்வையை...