Shadow

Tag: ஏ.எல்.விஜய்

மிஷன் சாப்டர் -1 விமர்சனம்

மிஷன் சாப்டர் -1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா விஜயன், பரத் போபண்ணா, அபிஹாசன், பேபி இயல், விராஜ், ஜேஷன் ஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் “மிஷன் சாப்டர் -1”.பொங்கலுக்கு வெளியான திரைப்படங்களில் ‘அயலான்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ மீது அதிகமான எதிர்பார்ப்புகள் குவிந்திருக்க, சத்தமில்லாமல் வந்து சாதித்துக் கொண்டிருக்கும் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியானதும், ஆங்காங்கே அடுத்து என்ன…? என்கின்ற எதிர்பார்ப்பை அழகாக படத்தின் திரைக்கதையில்  அடுக்கி ப்ரசண்ட் செய்திருக்கும் விதமும் படத்திற்கு பலமாக மாறியிருக்கிறது.ஆரம்பத்தில் என்னடா இது, நீண்ட நெடுங்காலத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்கின்ற பரிதவிப்பைக் கொடுத்து கொஞ்சமாய் கலங்கவிட்டாலும், அடுத்தடுத்து வந்த காட்சிகளில் ஹ...
ஜீ. வி. பிரகாஷ் குமாரின்  ‘அடியே’  இசை மற்றும்  முன்னோட்டம் வெளியீடு

ஜீ. வி. பிரகாஷ் குமாரின்  ‘அடியே’  இசை மற்றும்  முன்னோட்டம் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் 'அடியே'  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்  நேற்று மாலை சென்னை பி.வி.ஆர். சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், வெங்கட் பிரபு, ஏ எல். விஜய், சிம்பு தேவன், வசந்த பாலன், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டனர்.‌'திட்டம் இரண்டு' எனும் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'அடியே'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், RJ விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும்  இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.  மல்டிவெர்ஸ்  என்ற  எண்ணத்தை மையப்படுத்தி ரொம...
தேவி விமர்சனம்

தேவி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
89இல், 'அக்னி நட்சத்திரம்' படத்தில் கோரியோகிராஃபராக அறிமுகமான பிரபுதேவா, 27 வருடங்களுக்குப் பிறகு 'பிரபுதேவா ஸ்டூடியோஸ்' மூலம் தயாரிப்பாளராகவும் உருமாறியுள்ளார். அவரது முதல் தயாரிப்பான ‘சில சமயங்களில்’ படம் சர்வதேச வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கி, இந்தி என மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட 'தேவி' படமோ, ஒரே நாளிலேயே (அக்டோபர் 7) மூன்று மொழிகளிலுமே வெளியாகி, ஒரு புதிய சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகை ஆக முடியாத நிராசையில் தற்கொலை செய்து கொள்ளும் ரூபி, கிருஷ்ணகுமாரின் மனைவி தேவி உடலில் புகுந்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விழைகிறது. தேவியின் நிலையென்ன என்பதும், இந்த இக்கட்டிலிருந்து கிருஷ்ணகுமார் எப்படி மீள்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. விஜயகாந்தோடு பிரபுதேவா நடித்த 'எங்கள் அண்ணா' திரைப்படம் வெளியாகி 12 வருடங்கள் ஆகிறது. பின் இப்பொழுது தான், தமிழ்த் த...
பிரபு தேவாவுடன் இணையும் பாரா கான்

பிரபு தேவாவுடன் இணையும் பாரா கான்

சினிமா, திரைத் துளி
தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல், தெலுங்கு, ஹிந்தி என பல தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று கொண்டிருக்கிறது, பிரபு தேவா - தமன்னா - சோனு சூட் நடிப்பில் விஜய் இயக்கும் DEVI(L) திரைப்படம். பல வருடங்கள் கழித்து மீண்டும் ஹீரோவாக நடிக்கும் பிரபு தேவா, ஹாலிவுட்டின் சிறந்த கதாசிரியர் பவுல் ஆரோன் இந்தப் படத்திற்கு விஜயுடன் இணைந்து கதை எழுதுவது, என பல சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த நட்சத்திரக் கூட்டணியின் DEVI(L) திரைப்படம், தனது முதல் நாளில் இருந்தே பலரின் ஆர்வத்தைத் தூண்டி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தப் படத்தை பற்றிய தகல்வல்கள் யாவும் காட்டுத்தீ போல் அனைவரிடத்திலும் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவின் முன்னணி நடன இயக்குநரான பாரா கான், இவர்களுடன் இணைந்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. நடன இயக்குநராக மட்டுமில்லாமல் ப...
வியத்தகு விசாரணை – வியந்த இயக்குநர் விஜய்

வியத்தகு விசாரணை – வியந்த இயக்குநர் விஜய்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த படம். அவர் தனது மாஸ்டர் பீஸை உருவாக்கியுள்ளார். படம் பார்த்துவிட்டு, நான் வாயடைத்துப் போனேன். அவர் திரைக்கதையைக் கையாண்ட விதத்திலும், கதாபாத்திரத் தேர்விலும் மாயம் செய்துள்ளார். அனைவரும் உண்மையிலேயே படத்தில் வாழ்ந்துள்ளனர். தினேஷ், சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் ராமலிங்கத்துக்கும், மொத்த குழுவிற்கும் பெரிய வாழ்த்துகள். இந்தப் படம் அனைத்து வகையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்திய சினிமாவின் அடையாளமாகவே ஒட்டுமொத்த உலகிற்கும் விளங்கப் போகிறது. தமிழ்த் திரையுலகத்திற்கு பெருமையான தருணமாக இது அமையப் போகிறது. படத்தை ரிலீஸுக்கு முன்பாகவே பார்க்க முடிந்ததை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டிய படம். திரையரங்குகளில் வெளியானதும், தவறவிடாமல் அனைவரும் பாருங்கள். மனதைக் கனக்க வைக்கும் அ...