Shadow

Tag: ஐஸ்வர்யா தத்தா

இரும்பன் விமர்சனம்

இரும்பன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
குறவர் இனத்தைச் சேர்ந்த ஆஃபீஸுக்கு, சமண மதத்தைச் சேர்ந்த மஹிமா மீது காதல் வந்துவிடுகிறது. அவர்கள் காதலைச் சேர்க்க பரதர் (மீனவ) இனத்தைச் சேர்ந்த பீட்டர், பிளேடுடனும் ஆஸ்பித்திரியுடனும் இணைந்து மஹிமாவைக் கடத்தி விடுகின்றனர். ஆஃபீஸின் காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. அலுவலகத்தில் பிறந்ததால் ஆஃபீஸ் என்றும், மருத்துவமனையில் பிறந்ததால் ஆஸ்பித்திரி என்றும் பெயர் வைத்துவிடுகின்றனர். ஆஃபீஸாக ஜூனியர் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார். எம்ஜியார் - ஜானகியின் வளர்ப்பு மகள் சுதாவின் மகனாவார். வலது தோள் பட்டையில் எம்ஜியாரைப் பச்சை குத்திக் கொண்டு, லுங்கியைத் தொடை தெரிய தூக்கிக் கட்டிக் கொண்டு குறவராக நடித்துள்ளார். குறவர்களை அசூயையாகப் பார்க்கும் மக்களுக்கு மத்தியில், மஹிமா ஆஃபீஸை அன்புடன் பார்த்தவுடன், நாயகனுக்குக் காதல் வந்துவிடுகிறது. சமணத் துறவியாக மடத்தில் சேரும் மஹிமாவைக் கடத்திக் கடலுக்குக் கொண...
ஜாஸ்பர் விமர்சனம்

ஜாஸ்பர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தமிழில் வந்திருக்கும் முதல் ஹிட்மேன் படமென பட நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளனர். அடிதடி என வாழும் ஜாஸ்பர், போலீஸ்க்கு உதவும் ஒரு ஹிட்மேனாக உருமாறி வேட்டையாடுகிறான். அவன் குடும்பத்தை இழந்ததும் அனைத்தையுன் விட்டுத் தலைமறைவாகி விடுகிறான். ஜாஸ்பர் கிழப்பருவம் எய்தி முதுமையை அடையும் தருவாயில் உள்ள பொழுது, அவனது பக்கத்து வீட்டிலுள்ள இளைஞன் கடத்தப்படுகிறான். அந்த இளைஞனை மீட்க மீண்டும் ஹிட்மேனாக மாறுகிறான் ஜாஸ்பர். குடித்துக் குடித்து தன்னைச் சீரழித்துக் கொள்ளும் ஜாஸ்பரால், பக்கத்து வீட்டு இளைஞனைக் கண்டுபிடித்துக் காப்பாற்ற முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை. ஹிட்மேனின் அறிமுகம் ஒரு தோப்பில் நிகழ்கிறது. படத்தின் கதைக்களம் மிகவும் பெரியது. ஆனால், படத்தின் பட்ஜெட் காரணமாக எல்லாம் மிக எளிமையாக நிகழ்கின்றன. மிஸ்டர் ஜே எனும் ஹிட்மேன்க்கு அதிசய சக்திகள் உள்ளதாக வதந்தியும் பயமும் மக்களிடையே எழுகிறது. ...
ஜாஸ்பர் – தமிழில் ஒரு ஹிட்மேன்

ஜாஸ்பர் – தமிழில் ஒரு ஹிட்மேன்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் திரைப்படங்களின் எண்ணிக்கைகள் அதிகம். ஆனால், ஹிட்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஆக்ஷன் நிறைந்த த்ரில்லர் படங்களின் எண்ணிக்கைகள் மிகவும் குறைவு. அதை பூர்த்தி செய்யும் விதமாக விஸ்வரூபி பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்து, அறிமுக இயக்குநர் யுவராஜ்.D இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவுள்ளது ஜாஸ்பர் திரைப்படம். முழுக்க முழுக்க ஆக்ஷன், சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாக மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா தத்தா மற்றும் விவேக்கின் மென்மையான காதல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பிரபல இசைக்கலைஞர் ட்ரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணி இசையமைத்துள்ளார், பாடகர்கள் பிரதீப் குமாரும், சைந்தவியும் தங்கள் இனிமையான குரலில் பாட, அற்புதமான பாடல் காட்சிகளும் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படத்தில் விவேக் ராஜகோபால், ஐஸ்வர்யா தத்தா, சி.எம். பாலா, ராஜ் கலேஷ், லாவண்யா, பிரசாந்த் முரளி, கோட்டையம...
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ என்ற தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் பாட்டு, ஒரு அழகான காதல் பாடல். அந்தப் பாடலின் தொடக்கத்தைத் தலைப்பாக வைத்திருக்கும் இப்படமோ, ‘செயின் ஸ்னாட்சிங்’ பற்றிய படம். சுலபமாய் உருக்கிவிடக்கூடிய தங்கம் தான், மறைந்திருந்து பெண்களின் கழுத்தை மர்ம கும்பல் நோட்டமிடக் காரணம். பெண்களின் செயினை அறுப்பது வெறும் கொள்ளைக் குற்றம் மட்டுமில்லை, அது அட்டெம்ப்டட் மர்டரில் வரும் என்பதைப் படம் அழுத்தமாக வலியுறுத்துகிறது. நகை அணிந்து கொண்டு, இரவில் ஒரு பெண் தனியாக, என்று நடக்கிறாளோ அன்று தான் உண்மையாகச் சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் எனக் காந்தி சொன்னதை மாற்றி, என்று ஒரு பெண் பகலில் தைரியமாக நகையணிந்து நடக்க ஆரம்பிக்கிறளோ, அன்று தான் சுதந்திரம் எனப் படத்தின் இறுதியில் மெஸ்சேஜ் சொல்லியுள்ளார் இயக்குநர். பெண்களின் தங்கச்சங்கிலியை அறுக்கும் கும்பலிடம் இருந்து சங்கிலிய...