Shadow

Tag: ஐஸ்வர்யா மேனன்

பான் இந்தியா நடிகையாகும் ஐஸ்வர்யா மேனன்

பான் இந்தியா நடிகையாகும் ஐஸ்வர்யா மேனன்

சினிமா, திரைத் துளி
தமிழ்ப்படம் 2 எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து 'நான் சிரித்தால்', 'வேழம்', ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ்ப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். தற்போது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் தயாராகும் திரைப்படத்திலும் நடித்து வரும் இவர், பான் இந்திய திரைப்படமாக மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் ‘ஸ்பை’ எனும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கடந்தாண்டில் தெலுங்கில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற படம் 'கார்த்திகேயா 2' . இப்படத்தின் நாயகனான நிகில் சித்தார்த், கதையின் நாயகனாக நடித்து வரும் 'ஸ்பை' எனப் பெயரிடப்பட்டிருக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார். பான் இந்தியப் படைப்பாக தயாராகி வருவதால் இந்தப் படம் தமிழிலும் வெளிய...
தமிழ்ப்படம் 2 விமர்சனம்

தமிழ்ப்படம் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2010 இல் வந்த தமிழ்படம், தமிழ்ப்படம் 2 ஆகப் புத்தும்புது பொலிவுடன் வந்துள்ளது. இந்த முறை, இயக்குநர் C.S.அமுதன் தமிழ்ப் படங்களின் பொதுத்தன்மையை மட்டும் பட்டும்படாமல் ஓட்டாமல், ஹாலிவுட் படங்கள், சம கால அரசியலின் அவலங்கள், மாஸ் ஹீரோ படங்களின் காட்சிகள், இயக்குநர்களின் படமெடுக்கும் பாணிகள், ரியாலிட்டி ஷோ அலப்பறைகள் எனத் தனது களத்தைப் பெரிதாக்கியுள்ளார். இந்தப் படத்தின் திரைக்கதையும் எங்கெங்கோ, எப்படியெப்படியோ பயணித்தாலும், ‘போலீஸ் அத்தியாயம்’ என்ற உப தலைப்பிற்கு ஏற்றவாறு திரைக்கதை ஊர்ந்து செல்கிறது. தேவர் மகன் கமல் ஹாசன் கெட்டப்பில் அறிமுகமாகும் ஷிவா, படத்தின் முடிவில் மீண்டும் தேவர் மகன் க்ளைமேக்ஸ்க்கே வந்துவிடுகின்றனர். இடையில், வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா, பிசாசு, ஸ்பீடு, டெர்மினேட்டர் என இஷ்டத்திற்கு வலம் வருகிறது. எவ்வளவு யோசித்தாலும், முதல் பாகத்தின் காட்சிகள் எதுவும்...
கேரளத்து ஐஸ்வர்யா

கேரளத்து ஐஸ்வர்யா

சினிமா, திரைத் துளி
கேரளாவைப் பூர்விகமாகப் கொண்டிருந்தாலும், பொறியியல் பட்டதாரியான ஐஸ்வர்யா மேனன் பிறந்த வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். ஏற்கெனவே, கன்னடத்திலும் மலையாளத்திலும் நடித்து வருகிறார். "தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு தற்போது வீரா திரைப்படம் மூலம் நிஜமாகி இருக்கின்றது. இந்தப் படத்தில் எனக்கு மிக வலிமையான கதாபாத்திரம். தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்திருக்கும் ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் மூலம் நான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவது, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. இன்னும் இரண்டு திரைப்படங்களில் நடிப்பது பற்றிய பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது” என்றவர், “சூப்பர் ஸ்டாரின் படத் தலைப்பான வீராவின் மூலமாக தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைப்பது, எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது...