Shadow

Tag: ஐஸ்வர்யா ராய்

பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்

பொன்னியின் செல்வன் 2 விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பொன்னியின் செல்வன் நாவலே எழுத்தாளர் கல்கியின் புனைவு எனும் பட்சத்தில், இப்படத்தில் வரலாற்று ஆராய்ச்சி செய்வதென்பது பாலைவனத்தின் மத்தியில் கடல்மீன்களைத் தேடும் அநாவசிய முயற்சியாகும். ஆக, புனைவை ஆராயாமல் ரசிக்க முடிந்தால், பொன்னியின் செல்வன் 2, அதன் முதல் பாகத்தை விடவுமே சிறப்பாக உள்ளதை உணரலாம். போரில்லாமல் வரலாற்றுப் புனைவை முடிக்கக் கூடாதென்ற வணிக நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு, ஒரு போர்க்காட்சியை அமைத்துள்ளனர். அந்தப் போர்க்களக் காட்சி இல்லாமலேயே படம் முழுமையடைந்திருக்கும். காதலியை இழந்த வேதனையும், தீனமான நிலையில் இருந்த வீரபாண்டியனின் தலையைக் கொய்த குற்றவுணர்ச்சியும் ஆதித்த கரிகாலனை என்ன பாடுபடுத்துகிறது என்பதுதான் இப்படத்தின் கதை. யானையின் மொழி அறிந்தவர் என அருண்மொழி வர்மனைப் பற்றி கல்கி புகழ்ந்திருப்பார். அதை விஷுவலாக, இடைவேளையின் பொழுது ஜெயம்ரவிக்கான மாஸ் சீனாக மாற்றியிருப்பார் மணிரத்ன...
எந்திரன் விமர்சனம்

எந்திரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ஷங்கர் என கடந்த இரண்டு வருடமாக எதிர்பார்ப்பை எகிற வைத்த படம். வசீகரன் என்னும் விஞ்ஞானி பத்து வருடம் முயன்று 'சிட்டி' என்னும் அன்ட்ரோ- ஹியூமனாய்ட் வகை ரோபோவை இந்திய இராணுவத்திற்கு சேவை செய்ய வைக்கும் நோக்கில் தயாரிக்கிறார். பார்ப்பதற்கு மனிதனை போலவே இருக்கும் அந்த வகை ரோபோக்கள் அதற்கு கொடுக்கும் கட்டளைகள் சிரமேற் கொண்டு, அப்படியே செய்யும் அடிமைகள் போன்றன. மனித உணர்ச்சிகள் பற்றிய பிரக்ஞை இல்லாத ஓர் இயந்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என ஆய்வாளர்கள் குழு மறுக்கிறது. வசீகரன் மீண்டும் 'சிட்டி' மனித உணர்ச்சிகளை புரிந்துக் கொள்ளும் படி பயிற்சியளிக்கிறார். உணர்ச்சி வந்ததும் வசீகரனின் காதலியான் சனா மேல் 'சிட்டி' ரோபோவுக்கு காதல் வருகிறது. காதல் வந்து எடக்கு செய்யும் 'சிட்டி' ரோபோவை கடுப்பாகி, வெறுப்பாகி அழித்து விடுகிறார் வசீகரன்....