ஒரு தவறு செய்தால் விமர்சனம்
‘எங்க வீட்டுப் பிள்ளை’ எனும் படத்தில், 1965 இல் கவிஞர் வாலியால் எழுதப்பட்ட ‘நான் ஆணையிட்டால்’ பாடலில் வரும் ஒரு வரியைப் படத்திற்குத் தலைப்பாக வைத்துள்ளார் இயக்குநர் மணி தமோதரன். பாடலில் அடுத்த வரியான, ‘அதைத் தெரிந்து செய்தால்’ என்ற வரியையும் சேர்த்தே, கதையின் ஓட்டத்தை உருவாக்கியுள்ளார்.
திரைத்துறையில் உள்ள நண்பர்கள் மூவர்க்கு, தங்கியிருக்கும் அறையைக் காலி செய்யவேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. பிறரின் தேவையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், சுலபமாகச் சம்பாதிக்கலாமென பாடத்தைக் கோயம்பேடு மார்க்கெட்டில் கற்கின்றனர். தொழில்நுட்பம் தெரிந்த இளம்பெண் ஒருவரது துணையுடன், கே.கே.நகரில் நடக்கும் தேர்தலைப் பயன்படுத்திப் பெரும்பணம் பார்க்க நினைக்கிறார்கள்.
ஓர் அழகான ஃப்ளாஷ்-பேக் காட்சியில், தன் பள்ளிக்காதலை நினைவுகூருகிறான் நாயகன். அந்த மான்டேஜஸ்க்கு, டி.ஆர். குரலில் ஒரு நெடுங்கவிதை ஒலிக்கப்படுகிறது....