
க/பெ. ரணசிங்கம் விமர்சனம்
கால சக்கரம் போல் அரசு இயந்திரமும் சுழன்று கொண்டே இருக்கிறது. கண்களுக்குப் புலப்படாதகால சக்கரம் யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாது; மனிதர்களால் இயக்கப்படும் அரசு இயந்திரமோ ஆட்களுக்குத் தக்கவாறு தன் ஓட்டத்தை மாற்றிக் கொள்ளும். புகழ்மிகு நடிகை ஸ்ரீதேவியின் உடல் ராஜ மரியாதையோடு கொண்டு வர உதவ இயங்கும் அரசு இயந்திரம், ரணசிங்கத்தின் இறந்த உடலைக் கொண்டு வர இல்லாத நொறுநாட்டியமெல்லாம் பேசுகிறது.
அரசு இயந்திரம் சாமானியனுக்குக் காட்டும் முகமும், அதிகாரத்திற்கும் பணத்திற்கும் காட்டும் முகமும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தைப் போன்றது. இப்படம், அதைத் தோலுரித்துக் காட்டுகிறது.
இது அரசுடனான அரியநாச்சியின் தனிப்பட்ட போராட்டம். ஆனால் படத்தின் தலைப்பில் இருந்தே ரணசிங்கத்தின் ஆதிக்கம்தான். எவரையும் நம்பி வாழ முடியாது எனத் துணிந்து போராடத் தொடங்கும் அரியநாச்சி, கணவனின் சட்டையை அணிந்தே போராடுகிறார். இ...