Shadow

Tag: ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா

எமக்குத் தொழில் ரொமான்ஸ் விமர்சனம்

எமக்குத் தொழில் ரொமான்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
லியோனாவைப் பார்த்த முதல் பார்வையிலேயே உமா சங்கர்க்குக் காதல் வந்து விடுகிறது. லியோனாவிற்கும் காதல் வந்துவிட, அவர்களுக்கு இடையேயான ரொமான்ஸும் ஊடலும்தான் படத்தின் கதை. மீண்டுமொரு ஸ்டாக்கிங் (Stalking) படமாக இருக்குமோ என்ற எண்ணம் எழும்போது, உமாசங்கர் லியோவிடம் காதலைச் சொல்லி விடுகிறார். 'எனக்கு இது செட்டாகாது' என லியோ சொன்னதும், உமா சங்கர் நாயகியைத் தொந்தரவு செய்யவில்லை. மிகவும் ஆசுவாசமாக இருந்தது. நாயகியும் சட்டென காதலை உணரத் தொடங்கிவிடுவதால், அடுத்த படம் 'ரொமான்ஸ்'-இற்குள் போகுமென நினைத்தால், கடைசி வரை அதுக்குள் போகவே இல்லை. க்யூட்டாக வைக்க வேண்டுமெனத் தலைப்பை மிஸ் லீடிங்காக வைத்துள்ளனர். புரிதலில் ஒரு சின்ன பிரச்சனை, தன்னிடம் பொய் சொல்லி விட்டான் என்ற நாயகியின் கோபம்தான் படத்தின் மைய ஓட்டம். 112 நிமிட கால அளவு கொண்ட படம். திருப்பமோ, சுவாரசியமோ இல்லாமல் ஒரே நேர்க்கோட்டில் செல்லும் முதற்பா...
ஜாலியோ ஜிம்கானா விமர்சனம்

ஜாலியோ ஜிம்கானா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நான்-ஸ்டாப் நான்சென்ஸ் என படத்தைப் பற்றிப் படக்குழு விளம்பரப்படுத்தியுள்ளனர். ‘லாஜிக் பார்க்க்காதீங்க. மூளையைக் கழட்டி வைத்துவிட்டு, ஜாலியா படம் பார்த்துச் சிரிச்சுட்டுப் போங்க. உங்களைச் சிரிக்க வைக்கிறதே மட்டுமே எங்கள் நோக்கம்!’ என படம் தொடங்கும் முன்பே இயக்குநரின் வாய்ஸ்-ஓவர் ஒரு வேண்டுகோளை விடுக்கிறது. வெள்ளைக்காரன் பிரியாணி எனும் உணவகத்தை நடத்தி வருகின்றார் தங்கசாமி. தொழில் நொடிந்து போக, அவரது பேத்தி பவானி, கடன் வாங்கி ஒரு பிரியாணி கடையைத் தாத்தாவிற்கு வைத்துக் கொடுக்கின்றார். அரசியல்வாதியான அடைக்கலராஜ் சமஉ, தங்கசாமிக்கு ஒரு பெரிய ஆர்டரைக் கொடுத்துவிட்டு, பணம் தராமல் ஏமாற்றிவிடுகிறார். அடைக்கலராஜ் மீது வழக்கு போட பூங்குன்றன் எனும் வக்கீலைப் பார்க்கப் போகின்றனர். பூங்குன்றன் இறந்து கிடக்க, தங்கள் மீது கொலைப்பழி விழுமோ என பயந்து, பூங்குன்றன் பிணத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நினைக்கின்...
காரி – தீரன் அதிகாரத்திற்குப் பிறகு

காரி – தீரன் அதிகாரத்திற்குப் பிறகு

சினிமா, திரைச் செய்தி
ப்ரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 25ஆம் தேதி காரி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார், “ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கிடைக்காதிருந்த சமயத்தில் தான் இந்தக் கதையை இயக்குநர் ஹேமந்த் என்னிடம் கூறினார். இந்தக் கதையைக் கேட்டதும் எப்படியாவது இதைப் படமாக எடுத்துவிட வேண்டும் என முட...