![எழுத்தாளர்களை மதிக்கும் பா. ரஞ்சித் | தங்கலான்](https://ithutamil.com/wp-content/uploads/2023/11/Thangalaan-writers.jpg)
எழுத்தாளர்களை மதிக்கும் பா. ரஞ்சித் | தங்கலான்
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது.
படத்தொகுப்பாளர் R.K. செல்வா, “என் கரியரில் இது மிக முக்கியமான படம். இது விஷுவலாகப் பேசும் படம். அதனால் டீசரில் அதைக் காட்டலாம் என நினைத்துத் தான் டயலாக் இல்லாமல் எடிட் செய்தோம். எனக்கு நீண்ட காலமாக வரலாற்றுப் படத்தில் வேலை பார்க்க ஆசை இருந்தது. அது இந்தப் படத்தில் அமைந்தது மகிழ்ச்சி. பா. ரஞ்சித் அண்ணா, ஒவ்வொரு படத்திலும் அவருடன் எங்களையும் ...