Shadow

Tag: ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்

வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தெலுங்குத் திரையுலகத்தின் பவர் ஸ்டார் பவன் கல்யாண், சமந்தா நடிப்பில், 2013 இல் வெளிவந்த 'அத்தாரின்டிகி தாரேதி' எனும் படத்தின் மீள் உருவாக்கம் இந்தப்படம். ஆல்ரெடி பெரும் ஹிட்டடித்த நகைச்சுவை படம் சுந்தர்.சி கையில் கிடைத்தால்? ஆதித்யா ஸ்பெயினில் வாழும் பெரும்பணக்காரன். தாத்தாவின் வேண்டுகோளின்படி, தமிழ்நாட்டில் வசிக்கும் தனது அத்தையின் கோபத்தைத் தணிக்க, ஓட்டுநர் ராஜாவாய் அந்த வீட்டுக்குள் நுழைகிறான். தனது அத்தையைச் சமாதானம் செய்தானா இல்லையா என்பதே படத்தின் கதை. ஆதித்யாவாக எஸ்.டி.ஆர். தனுஷின் தயாரிப்பில் வந்த காக்கா முட்டை படத்திலேயே தன்னைக் கலாய்க்க அனுமதியளித்திருப்பார். இந்தப் படத்திலும், அது தொடர்கிறது. 'நேரத்துக்கு ஷூட்டிங் போவது' முதல், சிம்பு மீதான பொதுவான விமர்சனங்கள் எல்லாம் கலாய்க்கப் பயன்படுத்தியுள்ளனர். அவரோடு திரையில் யார் வந்தாலும், அவர்கள் அனைவரையும் மீறி தனது இருப்பைத் தக்க வ...