மிரள் விமர்சனம்
முதற்பாதியில், கதைக்கான அடித்தளத்தை அமானுஷ்யமாக அமைத்துவிட்டு, இரண்டாம் பாதியில் மிரள வைத்துள்ளார் இயக்குநர் M. சக்திவேல்.
பரத்தின் மனைவியான வாணி போஜனுக்கு, அமானுஷ்யமான கனவுகள் துரத்தியவண்ணம் உள்ளன. அந்தக் கனவுகளில் இருந்து, தன் மனைவியை மீட்க வழி தெரியமல் தவிக்கிறார் பரத். 'குலதெய்வம் கோயிலுக்குப் போய் படையல் இட்டால் எல்லாம் சரியாகும்' என பரத்தின் மாமியார் மீரா கிருஷ்ணன் சொல்ல, பரத் தன் மனைவி மற்றும் மகனுடன் கிராமத்திற்குக் கிளம்புகிறார்.
கிராமத்தில் இருந்து மீண்டும் ஊருக்குத் திரும்பி வரும் வழியில், அத்துவானக் காட்டில் குடும்பத்துடன் சிக்கிக் கொள்கிறார். அவரைச் சூழ்ந்து நெருக்கும் அமானுஷ்ய இடரில் இருந்து பரத்தால், அவரது குடும்பத்தைக் காப்பாற்ற முடிந்ததா என்பதே படத்தின் கதை.
காட்சிகளுக்கு அளித்த கவனத்தை வசனத்திற்கு அளிக்கத் தவறியுள்ளனர். ஹாரர் படத்திற்கான க்ரிப்பிங்கான முதற்பாதியாக இல...