புகழ் விமர்சனம்
ஏரியாவில் யாருக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக போய்த் "தட்டி"க் கேட்பவன் புகழ். அப்பழக்கம் அவனை எங்குக் கொண்டு போய் விடுகிறது என்பதுதான் படத்தின் கதை.
படம் கம்யூனிசத்தின் தேக்க நிலையை பொதுப்புத்தியின் நோக்கில் விமர்சனம் செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கான அவசியத்தை வலியுறுத்துகிறது. எனினும் அதிகாரத்தின் முன் எதுவும் செல்லுபடியாகாது என்ற அதிருப்திக்கு படம் இட்டுச் செல்கிறது. தோழராக நடித்திருக்கும் கவிஞர் பிறைசூடன், அப்பாத்திரத்திற்கு நல்ல தேர்வு.
படத்தில் மூன்று கதாபாத்திரங்கள் மிக இயல்பாய் வந்து ஈர்க்கின்றன. ஒன்று, அரசியல்வாதியாக வரும் தாஸ். வீட்டிலிருப்பவரைச் சமாளிக்கணும், கட்சியினரைச் சமாளிக்கணும், அமைச்சரைச் சமாளிக்கணும், காவல்துறையை நட்பாக வைக்கணும் என மனிதனுக்கு ஏகப்பட்ட பொறுப்புகள். இத்தனையையும் தாஸாக நடித்திருக்கும் இயக்குநர் மாரிமுத்து சுமந்துள்ளார். இரண்டாவது, ஊர் வம்ப...