யாவருக்குமான காமிக்ஸ்!
பொம்மைப் படங்கள் என கொஞ்சம் கேலியாக அழைக்கப்படும் சித்திரக் கதைகள் குழந்தைகளுக்கானது மட்டுமா? “ஆம்” என்பவரே இங்கு அதிகம்.
ஆனால் அப்படியில்லவே இல்லை, காமிக்ஸ் என்பது அனைத்து வயதினருக்குமானது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக “கிராபிக் நாவல்கள்” பற்றியதொரு கலந்துரையாடலை யாவரும்.காம், டிஸ்கவரி புக் பேலஸ், தமிழ் காமிக்ஸ் உலகம் ஆகிய மூவரும் இணைந்து நடத்தினர்.“ஃப்ரான்ஸில் 95% பேர் காமிக்ஸை விரும்பிப் படிக்கிறாங்க. லேண்ட் மார்க் போல, அங்க ஒரு 6 மாடிக் கட்டடம் முழுவதும் காமிக்ஸ்க்கு என தனியாக வச்சிருக்காங்க. உள்ள போனீங்கன்னா, காமிக்ஸ் படிச்சு தனியாகச் சிரித்துக் கொண்டிருக்கும் பெண்களைப் பார்க்கலாம். அந்த இடத்துக்குப் போனாலே மனம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.
அதே போல், ஜப்பானிலும் 95% பேர் மாங்கா (ஜப்பானிய மொழியில் காமிக்ஸ்)-க்கு அடிமைகள். நம்மூர்ல எப்படி வாஷிங் மெஷின்க்கு பக்கத்தில் ந...