
OMG – சன்னி லியோனின் ஹாரர் காமெடி படம்
சன்னி லியோன் நடிக்கும், வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் “ஓ மை கோஸ்ட் (OMG)” எனும் ஹாரர் காமெடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இப்படத்தில் மூன்று முக்கிய வேடங்களில் சன்னி லியோன் தோன்றுகிறார். இப்படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான R. யுவன், "இந்தப் படத்திற்காக, சன்னி லியோன் தனது பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென பல ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டார். OMG என்பது ஒரு வரலாற்று திகில் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படம். ஹாரர் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் சன்னி லியோன் பாத்திரத்திற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி இருப்பதால், அவரது தோற்றம் கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ளது.
“ஓ மை கோஸ்ட் (OMG)” திரைப்படத்தினை VAU Media Entertainment சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் White Horse Studios சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். சதீஷ், தர்ஷா குப்தா முதலியவர்கள்...