Shadow

Tag: கஜா புயல்

“கஜா பேரிடரிலிருந்து மீள அனைவரும் ஒன்று சேரவேண்டும் – நடிகர் ஆதி

“கஜா பேரிடரிலிருந்து மீள அனைவரும் ஒன்று சேரவேண்டும் – நடிகர் ஆதி

சமூகம், சினிமா
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் விவசாய மக்களுக்கு பல இளைஞர்கள் பொது சேவை மையங்கள் மூலம் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகர் திரு. ஆதி மற்றும் அவரின் குழு புயலால் பாதிக்கப்பட்டு, மற்றும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படாத பகுதிகளைக் கண்டடைந்து பேராவூரணி, அறந்தாங்கி பகுதியைச் சுற்றியுள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 520 குடும்பங்களுக்கு, மிகவும் முறையாக அந்தந்த குடும்ப ஆவணங்களைக் கொண்டு, தற்போதைய முக்கிய தேவையான சுமார் 5டன் எடை கொண்ட பொருட்கள் - தார்பாய் - சோலார் லைட்- கொசுவலை - போர்வை - மருந்துகள்-மற்றும் உணவு பொருட்களை 1-12-2018 அன்று வழங்கினர். மேலும், "அங்கு சென்று பார்த்ததில், நினைத்ததை விட மிகப் பெரிய பேரிடருக்கும் ஆளாகியுள்ளனர் என்பது வேதனை தருகித்ச்து. இதிலிருந்து அம்மக்கள் மீளவும், விவாசாய மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பவும், அனைவரும்...
டெல்டாவின் உடனடி தேவை மனித சக்திதான் – நடிகர் திருமுருகன்

டெல்டாவின் உடனடி தேவை மனித சக்திதான் – நடிகர் திருமுருகன்

காணொளிகள், சமூகம்
தமிழகத்தைச் சூறையாடிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் அதிக உயிர் பலிகளையும், பொருளாதார சேதங்களையும் செய்துள்ளதை அடுத்து, அப்பகுதி மக்கள் மிகவும் சோகத்தில், தங்கவும் பொங்கவும் வழியின்றித் தவித்து வருகின்றனர். அறுந்து விழுந்த மின் கம்பங்கள்; அழிந்துபோன கால்நடைகள்; உடைந்துபோன ஓடுகள்; சிதிலமடைந்த குடிசைகள்; இடிந்துபோன வீடுகள்; சிதைந்துபோன செல்வங்கள் என விவசாய பூமியான டெல்டாவைச் சுரண்டியெடுத்துள்ளது கஜா புயல். சென்னையைப் போல் பெருநகரங்களில் மரபு சாரா மாதச் சம்பள வேலைகளைப் பணிபுரிபவர்கள், சென்னை வெள்ளத்திற்கு பிறகு இழந்தவற்றை கொஞ்சமேனும் மீட்டெடுத்ததைப் போல, பல வருடங்களாக வளர்த்த வாழை, தென்னை, வெளிநாடு போய் பல வருடங்கள் சம்பாதித்துச் சேர்த்த பொன் பொருட்களை முறையான மாதவருவாய் இல்லாத, எப்போதாவது சாகுபடி சமயத்தில் ஓரிரண்டு முறை பொருள் ஈட்டும் குடிமக்களால் மீட்டெடுக்க முடிவது அத்தனை சுலபம் அல்ல. ம...