பாரத் சீனியின் ‘அனிரூத்’ கதாபாத்திரம்
தன்னை ஒரு படைப்பாளியாகக் 'கடுகு' திரைப்படம் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். வர்த்தக ரீதியான வெற்றியும், சினிமா விமர்சகர்கள் ரசிகர்களின் பாராட்டுகளும் விஜய் மில்டனின் குழுவிற்கு மேலும் ஊக்கத்தைத் தந்து இருக்கின்றது. கடுகு படத்தின் தயாரிப்பாளரான பாரத் சீனி, இந்தப் படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தின் தீவிர ரசிகனாக நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
"பாரத் சீனியின் 'அனிரூத்' கதாபாத்திரம், நாங்கள் எதிர்பார்த்தததை விட எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கின்றது. அவருடைய யதார்த்தமான நடிப்பு, சூர்யா சாரை வெகுவாகக் கவர்ந்து இருப்பது மட்டுமின்றி அவரின் பாராட்டுகளையும் பெற்று இருக்கின்றது. மேலும் பாரத் சீனி இயக்குநர் லிங்குசாமியின் உதவியாளர். அந்த வகையில் அவரை ஒரு நடிகராக திரையில...