Shadow

Tag: கடைசி உலகப்போர் திரைப்படம்

கடைசி உலகப்போர் விமர்சனம்

கடைசி உலகப்போர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஐ.நா.வில் இருந்து பிரியும் சீனாவும் ரஷ்யாவும், 'ரிபப்ளிக் (O.N.O.R.)' எனும் கூட்டமைப்பை உருவாக்கி, அமீரகம், இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசம் முதலிய எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைக்கிறது. ரிபப்ளிக்கில் இணையாத அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் மீது போர் தொடுக்கப்படுகிறது. இந்தியாவுடனான தொடர்பில் இருந்து தமிழ்நாடு பிரிக்கப்பட்டு அல்லலுகிறது. இலங்கையின் தனிப்படையினர் உதவியோடு, தமிழ்நாட்டை தன்வசத்திற்குக் கொண்டு வருகிறான் சீனன் ஒருவன். தமிழ்நாட்டு முதல்வர் நாசரை மிரட்டி தமிழ்நாட்டை ரிபப்ளிக்கில் சேர்த்துவிடுகிறான். நாயகன் தமிழ் எப்படித் திட்டமிட்டு தமிழ்நாட்டை சீன ரிபப்ளிக் ஆதிக்கத்தில் இருந்து மீட்கிறான் என்பதே கதை. கதை, திரைக்கதை, வசனம், பாடல், இசை, இயக்கம், தயாரிப்பு என இந்தப் படத்தின் ஆல்-இன்-ஆல் ஹிப்ஹாப் தமிழா ஆதிதான். ஆசையும் அனுபவமின்மையும் சேரும் புள்ளிதான் இப்படத்தின் மையக்கரு....
கடைசி உலகப்போர் – ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே

கடைசி உலகப்போர் – ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே

சினிமா, திரைச் செய்தி
ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் "கடைசி உலகப்போர்" ஆகும். மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுந்தர். சி, "என்னோட மகள் கல்லூரியில் புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார். அதை என் மனைவி வீடியோ எடுத்து அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த போது, எனக்குக் கண்ணீர் வந்தது. அதே போல் தான் என் தம்பிகளைப் பார்க்கும்போதும் வருகிறது...