Shadow

Tag: கணேஷ் வெங்கட்ராம்

வரலட்சுமி சரத்குமாரின் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் சபரி மே 3ல் வெளியாகிறது

வரலட்சுமி சரத்குமாரின் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் சபரி மே 3ல் வெளியாகிறது

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த 'சபரி' திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. இந்தப் பல மொழித் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி (பம்பாய்), 'விவா' ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி நிவேக்ஷா, பேபி கிருத்திகா மற்றும் பலரும் உள்ளனர். எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இந்தப் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாகப...
இணையதளம் விமர்சனம்

இணையதளம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கொலையை நேரடியாக ஒளிபரப்புகிறது 'வெல்லலாம் வாங்க' என்ற இணையதளம். அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடக் கூட கொலை செய்யப்படும் நேரம் துரிதமாகும். அதாவது அதன் பார்வையாளர்களே கொலையாளர்கள். நடத்துவது யார், ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்பதே படத்தின் கதை. இரட்டை இயக்குநர்களான ஷங்கரும் சுரேஷும் மிக அழகான கதையை உருவாக்கியுள்ளார்கள். ஆனால், அதன் திரைக்கதையும் தொழில்நுட்ப நேர்த்தியும் கதைக் கரு அளவுக்கு ஷார்ப்பாக இல்லை. நியாயமாகப் படம், பார்வையாளர்களைப் பதற்றத்திலும் குற்றவுணர்விலும் ஆழ்த்தியிருக்க வேண்டும். ஆனால், காட்சிக் கோணங்களும் படத்தொகுப்பும் அவ்வேலையைச் செய்யத் தவறிவிடுகிறது. நம்மால் ஓர் உயிர் போகப் போகிறதெனத் தெரிந்தும், எவ்வித லஜ்ஜையும் கிலேசமுமின்றி மக்கள் அந்தக் கொலை புரியும் இணையதளத்தைப் பார்வையிட்டுக் கொண்டே, கொலைக்குத் துணை புரிகிறார்கள். 'நான் மட்டுமா பார்க்கிறேன்? அவனை முதலில் பா...
உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்

உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"உன்னைப்போல் ஒருவன்" என்பது உலக நாயகன் கமல் அவர்களின் படம் என்று நினைத்தால் அது பாதி தான் உண்மை. ஒரு நல்ல படத்தை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த கமல் எடுத்த முயற்சி என்பது தான் மீதி பாதி உண்மை. இப்படத்தின் ஆதாரமான பாலிவுட்டின் "வெட்னஸ்டே" படத்தின் உரிமையை ராஜ்கமல் நிறுவனம் வாங்கித் தமிழுக்கு ஏற்றாற்போல் சின்னஞ்சிறு மாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். கொடுக்கும் பணத்திற்கு நல்ல தக்காளியாக வாங்க வேண்டும் என்று கவலைப்படுபவன் சாதாரண மனிதன். எது நடந்தாலும் தனக்கேன் வம்பு என முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறு திசையில் செல்லும் அந்த சாமானிய மனிதன், சமூகத்தில் நடக்கும் அவலங்களைப் பார்த்து மனம் நொந்து, தன்னால் முடிந்த பதில் நடவடிக்கை எடுக்க தீவிரம் காண்பித்தால் என்னாகும் என்பது தான் இப்படத்தின் ஒரு வரிக் கதை. 'சி4' என அழைக்கப்படும் செக்கோஸ்லோவக்கியன் ப்ளாஸ்டிக் குண்டுகளை சென்னையில் ஆறு இடத்தில் வைக...