Shadow

Tag: கண்ணன் இதழ்

கண்ணன் தந்த கவிஞர்

கண்ணன் தந்த கவிஞர்

கட்டுரை, சமூகம்
குழந்தைக் கவிஞர் என்றதுமே நம் அனைவருக்கும் அழ.வள்ளியப்பாவின் நினைவு உடனே வந்துவிடுகிறது. அது சரிதான். குழந்தைகளுக்காக வள்ளியப்பா ஆயிரக்கணக்கில் பாடல்கள் எழுதியிருக்கிறார். 'மலரும் உள்ளம்' என்கிற தலைப்பில் இவரெழுதிய புத்தகமொன்று ஒன்பது பதிப்புகளுக்கு மேல் அச்சாகி, முப்பதாயிரம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்திருப்பதாகவும் அறிய முடிகிறது. எனவே இவருக்குக் கிடைத்திருக்கும் குழந்தைக் கவிஞர் பட்டம் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். குழந்தைக் கவிஞர் என்றால் அழ.வள்ளியப்பா தான் என்கிற பிம்பம், தமிழ் சிறுவர் இலக்கியத்தில் உருவாகிவிட்டது என்ற உண்மையை எவரும் மறுக்க முடியாது. ஆனால் எண்ணிக்கையில் இவரளவு இல்லாவிட்டாலும், மிகக் குறைந்த அளவிலேயே மிகச் சிறந்த சிறுவர் பாடல்கள் எழுதிய கவிஞர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அழ.வள்ளியப்பாவிற்கு முன்பாகக் குழந்தைக் கவிஞர்கள் இருந்திருக்கவில்லையா என எண்ணிப் பார்...