
கண்ணப்பா விமர்சனம் | Kannappa review
கண்ணப்பர் எனும் சிவ பக்தரின் கதையை பாகுபலி போல் ஒரு பிரம்மாண்டமான புனைவுப் படமாக உருவாக்கியுள்ளனர்.
திண்ணன் எனும் வேட்டுவக் குல வீரன், கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளருகிறான். அவன் வசிக்கும் காட்டிலுள்ள வாயுலிங்கத்தை அபகரிக்க காளாமுகன் என்பவன் பெரும்படையுடன் வருகிறான். திண்ணனின் தந்தை நாதநாதன், தீவிலுள்ள ஐந்து இனக்குழுக்களயும் ஒன்றிணைத்து காளாமுகனை எதிர்க்க ஒன்றிணைக்கிறான். கைலாயத்தில் வாழும் சிவனோ, ருத்ரனை அனுப்பி திண்ணனைத் தடுத்தாட்கொண்டு, அவனைப் பக்திமானாக்குவதோடு, அவனது தீவிரமான பக்தியை உலகறியச் செய்வதோடு, தனிநபர் சொத்தாக இருக்கும் வாயுலிங்கத்தையும் மக்கள் வழிபாட்டுக்கு உரியதாக்குகிறார்.
சிவன், பார்வதியாக அக்ஷய் குமாரும், காஜல் அகர்வாலும் நடித்துள்ளனர். துவாபுர யுகத்தில், தவமியற்றும் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளிக்க வேடனாக வரும் கிராதமூர்த்தி (சிவன்) பாத்திரத்தில் மோகன்லால் வருகிறார்....