“வெற்றி பெற்றும் சப்பாணியாகப் பார்க்கப்படுகிறேன்” – வருத்தத்தில் சீனு ராமசாமி
'கண்ணே கலைமானே' படத்தின் பத்திரிகயாளர் சந்திப்பில், "தர்மதுரைக்கு பிறகும் ஒரு நல்ல கதையைச் சொல்லி என்னால் யாரையும் ஒப்புக் கொள்ள வைக்க முடியவில்லை. உண்மையைச் சொல்லணும்ன்னா சப்பாணியாகப் பார்க்கப்பட்டேன். தர்மதுரை அவ்வளவு வெற்றி பெற்றும் எனக்கு இந்த நிலைமை. விஜய் சேதுபதி திரும்பி வந்து ஒரு வாய்ப்பினை வழங்கும் வரை எனக்கு எந்த ஒரு நல்ல வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்களால் உடனடியாகப் படப்பிடிப்பைத் துவங்க முடியவில்லை. அந்த நேரத்தில் தான் வேறு கதைகளை எழுதும் வாய்ப்பு அமைந்தது.
பின்னர் நான் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அலுவலகத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு திரைப்படத்தை ஏற்றுக் கொண்டதற்காக உதயநிதி சாருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு அற்புதமான நடிகர், ஒரு 10 யதார்த்தமான படங்களில் அவர் நட...