Shadow

Tag: கன்னா பின்னா

தணிக்கை அதிகாரியைக் கன்னாபின்னாவெனக் கண்டிக்கும் தியா

தணிக்கை அதிகாரியைக் கன்னாபின்னாவெனக் கண்டிக்கும் தியா

சினிமா, திரைத் துளி
‘கன்னா பின்னா’ படத்தின் இயக்குநர் தியா, ‘நாளைய இயக்குனர்’ குறும்படப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர். இந்தப் படத்தை இயக்கியுள்ளதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். திருமணம் செய்தால் அது அழகான பெண்ணைத்தான், திருமணம் செய்துகொள்வேன் என அழகான பெண்களைத் தேடி அல்லோலப்படும் நாயகனின் கதைதான் இந்த ‘கன்னா பின்னா’. இதை அக்மார்க் காமெடிப் படத்தை இயக்கியுள்ள தியா தனது படத்திற்கு உரிய சென்சார் சான்றிதழ் பெறப் போராடி வருகிறார். “ஜனரஞ்சகமான காமெடிப் படத்தையே நான் இயக்கியுள்ளேன். அதுவும் சென்சார் விதிகளுக்கு உட்பட்டுத்தான். ஆனால் தணிக்கை அதிகாரியான மதியழகன், இந்தப் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் தான் தருவேன் எனக் கூறியதோடு, விளக்கம் கேட்ட என்னை அவமானப்படுத்தி வெளியே நிற்கவைத்துவிட்டு, படத்தின் தயாரிப்பாளரிடம் பேரம் பேசுகிறார். தணிக்கை என்கிற அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு சினிமாவை அழிக்க...