Shadow

Tag: கமரகட்டு

கமரகட்டு விமர்சனம்

கமரகட்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தான் கற்ற மொத்த வித்தையும் இறக்குவது என்றால் என்ன? அதைத் தெரிந்து கொள்ள அவசியம் நீங்க கமரகட்டு பார்க்கவேண்டும். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை, இயக்கம் என அனைத்துக்கும் சொந்தக்காரர் ராம்கி ராமகிருஷ்ணன் ஆவார். திருவண்ணாமலையில் பன்னிரெண்டாவது படிக்கும் இரண்டு மாணவர்கள் உடன் படிக்கும் இரண்டு மாணவிகளைக் காதலிக்கிறார்கள். கல்லூரி போன முதல் நாளே காசு, பணம், துட்டு, நகை, சொத்து என வேறிருவரை அம்மாணவிகள் காதலிக்கத் தொடங்குகின்றனர். வெகுண்டெழும் 12வது தேறாத அம்மாணவர்கள், காதலியின் (மாணவிகள் இருவரும் சகோதரிகள்) தாயிடம் நியாயம் கேட்கின்றனர். அந்தம்மாவும், ‘எவ்ளோ நல்ல பசங்களா இருக்கீங்க?’ என அடுத்த நாளே ரெஜிஸ்டர் மேரேஜ்க்கு ஏற்பாடு செய்து கல்யாணம் செய்ய வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்குகிறார். பசங்க செம ஹேப்பியாகி, தனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்டான கமரகட்டை காதலியின் அம்மாவுக்குத் ...