Shadow

Tag: கமலக்கண்ணன்

குரங்குப் பெடல் திரைப்படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்

குரங்குப் பெடல் திரைப்படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்

சினிமா, திரைச் செய்தி
நடிகர் சிவகார்த்திகேயனின், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நல்ல கதையம்சம் சார்ந்தப் படங்களைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்து வருகிறது. இப்போது இயக்குநர் கமலக்கண்ணனின் ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களுக்கு மேலும் ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் கதையைத் தருவதில் பெருமை கொள்கிறது சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்.தமிழ்நாட்டின் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள மயக்கும் காவிரி ஆற்றின் அழகிய கரையோரங்களில் 1980 களின் கோடைகாலத்திற்கு பார்வையாளர்களை படம் கொண்டு செல்கிறது. மனதைக் கவரும் இந்தக் கதை, சைக்கிள் ஓட்டும் கலையில் தேர்ச்சி பெறத் துடிக்கும் மகனான மாரியப்பனுக்கும் அவனது தந்தைக்கும் இடையே உள்ள பிணைப்பை வெளிக்கொண்டு வருகிறது. ராசி அழகப்பன் எழுதிய ’சைக்கிள்’ சிறுகதையால் ஈர்க்கப்பட்ட இந்தத் திரைப்படம் குடும்ப அமைப்பு மற்றும் கனவுகள் பற்றிய ஒரு கூர்மையான ஆய்வு ஆகும்.இயக்...