Shadow

Tag: கமாலினி முகர்ஜி

இறைவி விமர்சனம்

இறைவி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெண்களை, குறிப்பாக மனைவியை ஆண்கள் எப்படி நடத்துகிறார்கள்? கணவனின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் மனைவி எனும் இறைவிகளுக்கு இருக்கும் பொறுமை, அனுசரணை, விட்டுக் கொடுக்கும் மனோபாவம் போன்றவை ஆண்களுக்கு உண்டா என்ற கேள்வியை முன் வைக்கிறது படம். பள்ளி மாணவி பொன்னி, புதிதாகத் திருமணமாகும் ஐ.டி. துறை ஊழியை யாழினி, மூத்த மகனின் திருமணத்தில் களைத்திருக்கும் மீனாக்ஷி ஆகிய மூன்று பெண்களைப் பற்றியும், அவர்களைச் சார்ந்திருக்கும் ஆண்களையும் பற்றிய கதை இது. தயாரிப்பு நிறுவனங்களின் லோகோ போடும்பொழுதே எழும் மழையின் பின்னணி இசை, நம்மை ஏதோ ஓர் அனுபவத்திற்காகத் தயார்ப்படுத்துகிறது. பொன்னி, யாழினி, மீனாக்ஷி ஆகிய மூவருக்கும் மழையில் இறங்கி நனைய ஆசை இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத சூட்சமத் தளைகள் அவர்கள் நனைவதைத் தடுத்து கையை மட்டும் நீட்டி மழையைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதிக்கிறது. இம்மூவரில், ஒருவரை மட்ட...