Shadow

Tag: கயல் ஆனந்தி

விஜய்சேதுபதி வெளியிட்ட கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ பட முதல் பார்வை!

விஜய்சேதுபதி வெளியிட்ட கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ பட முதல் பார்வை!

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’. இதில் நடிகர் ஆர் கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இதன் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரக்கூடிய கயல் ஆனந்தியின் 'ஒயிட் ரோஸ்' படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி முதல் பார்வையை வெளியிட்டு படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.இக்கதையில் காவல் கட்டுபாட்டு மை...
இராவண கோட்டம் விமர்சனம்

இராவண கோட்டம் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘மதயானைக் கூட்டம் (2013)’ படம் தந்த அனுபவத்தைப் பத்தாண்டுகளாகியும் மறக்க முடியாதளவு மிக நேர்த்தியாக நேட்டிவிட்டியுடன் இயக்கியிருந்தார் விக்ரம் சுகுமாரன். அந்தப் படம், ஹிந்தியில் ‘ராவன்பூர்’ என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. விக்ரம் சுகுமாரனின் அடுத்த படைப்பிற்காகச் சினிமா ஆர்வலர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ரசிகர்களின் மிக நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு, ஒருவழியாக அவரது அடுத்த படைப்பான “இராவண கோட்டம்” திரையரங்கை எட்டிவிட்டது. ஏனாதி எனும் கிராமம் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள 16 கிராமங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நல்லவர் போஸ். அந்தக் கோட்டத்திலேயே, நல்லது கெட்டது அறிந்த ஒரே ஆள். அந்த ஏரியா சமஉ (MLA) கூட போஸைப் பார்த்தால் பம்முவார். போஸ், ஊர் ஒற்றுமையைக் காப்பாற்ற உயிரையும் கொடுப்பார்; ஊர் ஒற்றுமைக்குப் பாதகமென்றால் உயிரையும் எடுப்பார். ஆளுங்கட்...
இராவண கோட்டம் – ராம்நாடு மக்களின் வாழ்க்கைப்படம்

இராவண கோட்டம் – ராம்நாடு மக்களின் வாழ்க்கைப்படம்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
கண்ணன் ரவி க்ரூப் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "இராவண கோட்டம்". மே 12 உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நடிகர் இளவரசு, “இந்தப் படத்தின் கலை இயக்குநர் நர்மதாவிற்கு வாழ்த்துக்கள். விக்ரம் சுகுமாரனிடம் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டராகப் பணி செய்வது மிகக் கடினம் இருவருக்கும் மிகப் பெரிய வாழ்த்துகள். இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். படம் பார்த்த பிறகு உங்களுக்குத் தெரியும். தென் பகுதிகளில் பல கஷ்டங்கள் உள்ளது. தண்ணீர் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. அதற்கான காரணங்களையும் இந்தப் படத்தில் பேசியுள்ளனர். ஷாந்தனு வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன். கண்டிப்பாக இந்த...
நதி விமர்சனம்

நதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மதுரை, சாதி, பதின் பருவத்துப் பையன்களின் கையில் சிறுவயதிலேயே கத்தி, கொலை செய்து வாழ்க்கையைத் தொலைக்கும் சுள்ளான்கள், கனவுகளோடு இருக்கும் இளைஞர்கள் என சசிகுமாரின் வாய்ஸ்-ஓவரில் கதை தொடங்குகிறது. ஷட்டில்காக் வீரனான சாம் ஜோன்ஸ்க்கும், கயல் ஆனந்திக்கும் காதல் மலருகிறது. அவர்களுக்கு இடையில், ஜாதியும் கெளரவமும் தன் கோர முகத்தைக் காட்ட, காதலர்களின் கதி என்னவென்பதே படத்தின் கதை. கதைக்குள் நேரடியாகச் செல்லாமல், சசிகுமாரின் வாய்ஸ்-ஓவரில் மதுரையின் குற்றப்பின்னணி பற்றிச் சொல்வது; பின், இதுதான்ங்க காலேஜ், காலேஜ் வகுப்பறை எனக் காட்டி, அங்கு ஒரு பாடல் – நடனம் அமைத்து, கதைக்குள் செல்ல சுற்று வழியை எடுக்கும் பழமையான கதைசொல்லல் பாணி உபயோகிக்கப்பட்டுள்ளது. கதைக்களம் மதுரை என்பதால், அதன் தொன்மையை உணர்த்தும் குறியீடாக அந்தப் பாணியைப் பயன்படுத்தியிருப்பார் போல இயக்குநர் தாமரை செல்வன். சாம் ஜோன்ஸே படத்தைத்...
நதி – சமூக அவலங்களைச் சாடும் கமர்ஷியல் டிராமா

நதி – சமூக அவலங்களைச் சாடும் கமர்ஷியல் டிராமா

சினிமா, திரைச் செய்தி
மாஸ் சினிமாஸ் சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரிக்க, இயக்குநர் K. தாமரைசெல்வன் இயக்கத்தில், காதலையும் நட்பையும் மையமாகக் கொண்டு, சமூக அவலங்களைச் சாடும், ஒரு கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் "நதி". படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, ஜூலை 22 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. யூ-ட்யூப்பில் கோடங்கி எனும் பெயரில் விமர்சனம் செய்யும் நடிகர் வடிவேல் முருகன், “இந்தப் படத்தின் மூலம் கரு. பழனியப்பன் போன்ற ஒரு சகோதரர் எனக்குக் கிடைத்துள்ளார். இயக்குநர் எந்தவித பதட்டமும் இல்லாமல், படத்தை எழுதி இயக்கியுள்ளார்” என்றார். இயக்குநர் A. வெங்கடேஷ், “AP International உடன் இந்தப் படத்தை இணைந்து தயாரிப்பாளர் வெளியிடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கயல் ஆனந்தி திரையில் குடும்பப் பாங்கான பாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் தாமரைசெல்...
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது ஒரு கற்பனைக் கதை. ஆனால், இந்தக் கதையில் காட்டப்படும் டாக்குமென்ட்ரியில் நிகழ்வது போல் நடப்பதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ள மெத்தனமான நாடு இந்தியா என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கடல்நீரில் கலந்த எண்ணெயை வாளியில் அள்ளும் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்த அரசாங்கம், கரை ஒதுங்கும் ஆபத்தை விளைவிக்கும் குண்டை, வெடிக்கும் குண்டு என ஒத்துக் கொள்வதற்கே அதன் வெட்டி கெளரவம் இடம் கொடுக்காது. ஏன் உலகிற்கு இத்தனை குண்டுகள், இத்தனை உயிரிழுப்புகள் என்ற கேள்வியை மிக அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளது சடோகா சசாகியின் கதை. ஆனால், தினேஷ் வசமிருக்கும் குண்டு வெடித்து விடக் கூடாது என்ற பதைபதைப்பை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது படம். அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்கும் ஆவல், தோழர் ரித்விகாவிற்கு அதிகமாக உள்ளதே தவிர, அதை வெடிக்கவிடாமல் செய்ய என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்றெல்லாம் அவர் யோசிப்பதில்லை. ...
இரும்புக் கடையின் நீல இசை

இரும்புக் கடையின் நீல இசை

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியதாவது, "நீலம் புரொடக்சன் இந்த மாதிரி நிகழ்வுகளை நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். எப்படி ஒரு மாடு மேய்க்கிறவனைக் கொண்டுவந்து 'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்க வைத்தாரோ, அதே போல் இரும்புக் கடையில் வேலை பார்க்கும் ஒருவரை இப்போது "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தை இயக்க வைத்துள்ளார் அண்ணன் பா.ரஞ்சித். தோழர் அதியன் அவர்களின் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். 'இப்படியான ஒருவர் படமெடுத்தால் எப்படி இருக்கும்?' என்ற ஆசை எனக்குள் இருந்தது. இப்படத்தை எதைக்கொண்டு தடுத்தாலும் இப்படம் அடைய இலக்கை அடைந்தே தீரும்" என்றார் நடிகை ஆனந்தி, "ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீலம் புரொடக்சன் என் சொ...
ராவண தோட்டத்தில் கயல் ஆனந்தி

ராவண தோட்டத்தில் கயல் ஆனந்தி

சினிமா, திரைத் துளி
'கயல்' படத்தில் மிகவும் எளிமையான மற்றும் அன்பான கதாபாத்திரத்திலும், 'பரியேறும் பெருமாள்' படத்தில் மிகவும் அப்பாவியான பெண்ணாகவும் நடித்த ஆனந்தி தற்போது சாந்தனு பாக்யராஜின் ராவண கோட்டம் படத்தில் ஒரு உறுதியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். "எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மிகச்சிறப்பான படங்கள் ஆரம்ப கட்டத்திலேயே கிடைத்தது என் அதிர்ஷ்டம். குறிப்பாக, 'பரியேறும் பெருமாள்' போன்ற படங்களில் நடித்த பிறகு, நல்ல வரவேற்பு கிடைத்த பிறகு கதைகளைக் கவனமாக தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவானது. "ராவண கோட்டம்" அந்த மாதிரியான ஒரு திரைப்படம். இயக்குநர் விக்ரம் சுகுமாரன் ரசிகர்களைக் கவரும் மிகச்சிறப்பான ஒரு கதையுடன் வந்துள்ளார். மதயானை கூட்டம் படத்துக்குப் பிறகு மிகவும் பொறுமையுடன் இந்த ஸ்கிரிப்டை உருவாக்கியுள்ளார். சாந்தனு பாக்யராஜ் தோற்றம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கும். படப்பிடிப்பு தளத்தில் ...