சொர்க்கவாசல் விமர்சனம்
'இந்தப் படத்தின் வகைமை சர்வைவல் த்ரில்லர். இதைப் புரிந்து கொண்டு ரசிகர்கள் படம் பார்க்க வேண்டும்' என ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார் எழுத்தாளர் தமிழ் பிரபா.
செய்யாத கொலைக்காகச் சிறைக்குச் செல்கிறான் பார்த்திபன். சிறையைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் சிகாமணியை ஒடுக்க நினைக்கிறார் காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் குமார். எதிர்பாராத விதமாக சிகாமணி இறந்து விட, சிறைக்குள் கலவரம் மூள்கிறது. அந்தக் கலவரத்தை யார் யார் எப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
சிறைக்குள் நடக்கும் கலவரத்தை விசாரிக்க வருகிறார் இஸ்மாயில். அவரது விசாரணையில் இருந்தே கதை விரியத் தொடங்குகிறது. வேகமாகப் பேசும் நட்டிக்கு நிதானமாக விசாரிக்கும் பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார்.
சிறைச்சாலையையே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் சிகா எனும் சிகாமணியாக செல்வராகவன் நடித்து...