
கள்ளாட்டம் விமர்சனம்
லாப நோக்கத்தோடு சட்ட விரோதமாக ஆடுவதும்; உண்மையில்லாமல் பாவனையாக ஆடுவதும் கள்ளாட்டம் ஆகும். வில்லனான ஏழுமலை முன்னதையும், அதைத் தோற்கடிக்கும் முயற்சியில் நாயகன் தமிழரசன் பின்னதையும் ஆடுகின்றனர். வெற்றி யாருக்கு என்பதே படத்தின் கதை.
ஒரு சிறுமியின் அழகான முகத்தில் இருந்து படம் தொடங்குகிறது. அந்தத் தாக்கம் மறையும் முன், ஒரு விபத்தின் மூலமாக படம் வேகம் எடுக்கிறது. சிறுமியின் தந்தையான மகேந்திரனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஏற்படுகிறது. திக்கற்று கதி கலங்கிப் போயிருக்கும் மகேந்திரனுக்கு அக்கறையோடு உதவுகிறார் இன்ஸ்பெக்டர் தமிழரசன். உதவ வந்த இன்ஸ்பெக்டருக்கு அதனால் இக்கட்டு நேருகிறது. மகேந்திரனாக ரிச்சர்ட்டும், தமிழரசனாக நந்தாவும் நடித்துள்ளனர். கள்ளாட்டம் ஆடும் நந்தா தான் படத்தின் நாயகன். நந்தா காட்டும் விறைப்பும் தீவிரமும் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் நேர்மையையும் மனநிலையையும் கச்சிதம...