ஹார்வார்ட் தமிழ் இருக்கை – கவிஞர் தாமரையின் பங்களிப்பும் வேண்டுகோளும்
உலகப்புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று அமைய இருக்கிறது. தமிழ் தொடர்பான உருப்படியான வேலை என்றால் அது இதுதான்.
தமிழ் இருக்கை என்றால் என்ன? எதற்காக அது அமைக்கப்பட வேண்டும்?
உலகெங்கும் சுமார் 10 கோடித் தமிழர்கள் உள்ளோம். உலகின் பெரிய இருபது மொழிகளில் தமிழும் அடக்கம். உலகின் ஆறு செம்மொழிகளில் தமிழும் ஒன்று. எனினும் உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. பன்னாட்டு ஆய்வாளர்களைக் கவர முடியாமையும், அதனால் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களில் அடங்கும்.
நமது பண்டைத்தமிழ் இலக்கியங்கள், உலக அங்கீகாரம் பெற்ற பிறமொழி இலக்கியங்களுக்கு நிகராக வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம்.
பன்னாட்டு அளவில் முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்கவும் ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும் போது இந்தப் போதாம...