Shadow

Tag: கவிதா பாரதி

மகளிர் தினத்தில் வெளியாகும் பா.ரஞ்சித் வழங்கும் J பேபி

மகளிர் தினத்தில் வெளியாகும் பா.ரஞ்சித் வழங்கும் J பேபி

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் , விஸ்டாஸ் மீடியாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் Jபேபி. அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் தினேஷ், ஊர்வசி, மாறன் , மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படம் மார்ச் 8 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்திற்கு சென்சார் எந்த வித கட்டும் கொடுக்காமல், மியூட் செய்யப்படாமல் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான கதையாக , குடும்பத்தோடு கண்டுகளிக்கும் படமாக உருவாக்கியுள்ளார்கள். பா.இரஞ்சித் தயாரிக்கும் படங்களில் இந்த படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் . ஊர்வசி, தினேஷ், மாறன், கவிதா பாரதி, ஜெயமூர்த்தி, சேகர் நாராயணன், ஏழுமலை, தக்‌ஷா, இஸ்மத் பானு, சபீதா ராய், பெ.மெலடி டார்கஸ், மாயாஸ்ரீஅருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். டோனி பிரிட்டோ இசையமைக்க,  ...
பம்பர் விமர்சனம்

பம்பர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பம்பர் என்றதும் என்ன நினைவுக்கு வருகிறது. பம்பர் ப்ரைஸ் தானே. பல்வேறு விதமான பம்பர் ப்ரைஸ் இருக்கின்றன. ஆனால் லாட்டரியின் பம்பர் ப்ரைஸுக்கு தனி மவுசு. கூவிக் கூவி மூலை முடுக்கெல்லாம் லாட்டரி சீட்டை விற்ற காலம் 2003ஆம் ஆண்டோடு தமிழகத்தில் முடிவுக்கு வந்தது. ஆனால் இன்னும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் தடையின்றி இயங்கி வருகின்றன. குறிப்பாக நம் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டை அரசாங்கமே ஏற்று நடத்தி வருகிறது. எதற்கு இந்தத் தகவல் என்றால், படத்தின் டைட்டிலைப் போல், படத்தின் மையமே அந்தப் பம்பர் தான். பம்பர் பரிசாக விழும் 10 கோடி ரூபாய் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகின்றது, அதே நேரம் ஒரு மனிதனை மட்டும் மாற்ற முடியாமல் எப்படி அவன் காலடியில் அது தோற்கிறது என்பதே இந்த “பம்பர்” திரைப்படத்தின் கதை. மேற்சொன்ன விசயங்களை வைத்தே நீங்கள் நூல் பிடித்தாற் போல் இதுதான் கதையென்று...
மதுரவீரன் விமர்சனம்

மதுரவீரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது தந்தை ரத்தினவேலுவைக் கொன்றது யாரென அறியவும், அவர் நடத்தி வந்த ஜல்லிக்கட்டை ஊரில் தொடர்ந்து நடத்திடவும் மலேஷியாவில் இருந்து சொந்த ஊருக்கு வருகிறான் துரை. அவனது இந்த இரு நோக்கங்களும் நிறைவேறியதா என்பதுதான் படத்தின் கதை. மதுரவீரன் எனத் தலைப்பு வைத்திருந்தாலும், சண்முகப்பாண்டியனின் அறிமுகம் ஆர்ப்பாட்டமாய் இல்லாமல் கதையின் போக்கிற்குச் சாதாரணமாய் அமைத்திருப்பது ஆசுவாசத்தைத் தருகிறது. துரையாகச் சண்முகப்பாண்டியன் அடக்கியே வாசித்துள்ளார். 'பூ' படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய P.G.முத்தையா, இப்படத்தை இயக்கி ஒளிப்பதிவும் செய்துள்ளார். எடுத்துக் கொண்ட கதைக்கு வஞ்சனை செய்யாமல் நிறைவானதொரு அனுபவத்தைத் தருகிறார். 2017இன் தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டத்தைக் கதைக்குக் கச்சிதமாய் முடிச்சுப் போட்டுவிடுகிறார். ஜல்லிக்கட்டில் சாதி எப்படிக் குறிக்கிடுகிறது என்பதை மிக அழகாகச் சொல்லியுள்ள...
படைவீரன் விமர்சனம்

படைவீரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆண்ட பரம்பரை என்ற பெருமையைத் தலையில் சுமந்தவாறு திரியும் முனீஸ்வரன், படைவீரனாய்க் காவல்துறையில் சேருகிறான். 'சாதிக்கு ஒன்னுன்னா பெத்த தாயைக் கூடக் கருவறுப்பேன்' என்று நாயகனின் நண்பன் சொல்வான். இவ்வசனத்தை, படத்தின் ஒரு வரிக்கதையாகக் கொள்ளலாம். படம் ஒரு முக்கியமான அம்சத்தைத் தொடுகிறது. அது சாதிப்பற்று மனிதத்தன்மையை அழித்து எப்படி வெறியாகப் பரிணமிக்கிறது என்பதே! ஊரிலேயே இருக்கும் இளைஞர்களுக்கும் மத்திம வயது பெண்களுக்கும், அவர்களை வழிநடத்தும் பழமையில் ஊறிய தலைவனுக்கும் அவ்வெறி நிறைந்துள்ளது. தன் சகோதரியை ஊர்ப் பெண்கள் கூடிக் கொலை செய்யும் பொழுது, அந்த அண்ணனுக்கு எந்தப் பதற்றமும் எழுவதில்லை. சாதிப் பெருமையைக் காப்பது தான் தங்கள் தலையாயக் கடமையெனக் கருதிக் கொலை செய்யும் பெண்களுக்கோ எந்தக் குற்றயுணர்ச்சியுமில்லை! 'உங்களுக்கு என்ன செய்யணும்னு தெரியாதா?' என்று தலைவராக வரும் கவிதா பாரதியின் கேள்வி...