ரவி மரியா – ‘காட்டேரி’ படத்தின் மூன்றாவது கதாநாயகி
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் த்ரில்லரக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான் விஜய், ரவிமரியா, மைம் கோபி, லொள்ளு சபா மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘யாமிருக்க பயமே’ என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டிகே இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் . படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே' படத்தில் பின்னணி இசையமைத்த பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா, இயக்குநர் டீக...