காட்ஸ் ஆஃப் எகிப்த் விமர்சனம்
மனிதர்களும், கடவுள்களும் ஒன்றாய் வாழ்ந்த காலமது. கடவுளே மன்னனாக இருந்து மக்களை ஆட்சி செய்கிறார்கள். ஒசிரிஸ் எனும் எகிப்தின் மன்னன், காற்றுக் கடவுளான தன் மகன் ஹோரஸுக்கு முடிசூட்ட, விழா ஏற்பாடு செய்கிறார். அங்கே வரும் ஹோரஸின் சிற்றப்பாவான பாலைவனங்களுக்குப் பொறுப்பேற்கும் இருள் கடவுள் செத், தன் அண்ணனான ஒசிரஸைக் கொல்வதோடு ஹோரஸின் இரண்டு கண்களையும் பிடுங்கிக் கொள்கிறார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
இப்படத்தில் தோன்றும் கடவுள்களின் சராசரி உயரம் 9 அடி. ஆவேசமாகிச் சண்டையிடும் தருணங்களில் 12 அடிக்கு விஸ்வரூபமெடுப்பார்கள். கடவுள்கள் தான் எனினும் அவர்களுக்கும் மரணம் உண்டு. இருள் கடவுள் செத் எதிர்பார்ப்பதோ மரணமின்மையையோடு தீர்க்க ஆயுசாக நைல் நதி பாயும் எகிப்தை ஆள்வது. அவரது தந்தையான சூரிய கடவுள் “ரா”-வோ, தனக்குப் பிறகு பூமியை விழுங்க நினைக்கும் அபோஃபிஸ் எனும் ராட்சஷ ஜந்துவுடன் தினமும் ...