நாளை முதல் குடிக்க மாட்டேன் விமர்சனம்
எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வார் இங்கிலீஷ் டீச்சர் மலர், ஆனா குடிக்காரர்களை மட்டும் எந்த ஜென்மத்துக்கும் மன்னிக்கவே மாட்டார். தனக்குக் குடிப்பழக்கம் உள்ளதை மறைத்து, மலரைக் காதலித்து மணம் புரிந்து கொள்கிறார் தமிழாசிரியர் அ.சிவக்குமார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
'உள்ளொற்றி உள்ளுர்..' எனத் தொடங்கும் குறளில் இருந்து படம் தொடங்குகிறது. நாயகனின் குணத்தை விளக்க இக்குறளை உபயோகப்படுத்தியுள்ளனர். சின்னஞ்சிறு பட்ஜெட் படம். இயக்குநர் அண்ணன் செந்தில்தல்ராஜாவுக்காக அவரது M.G.ராஜாவே தயாரித்துள்ளார். முடிந்தளவு இழுத்துப் பிடித்துப் படத்தை எடுத்துள்ளது ஆரம்பம் முதலே பட்டவர்த்தணமாய்த் தெரிகிறது. எளிமையில் சுவாரசியத்துக்கு முனைந்துள்ளனர்.
கட்டுக்கோப்பான திரைக்கதை இல்லையெனினும், நாயகனாக நடித்திருக்கும் ராஜ் ஒற்றை ஆளாகப் படத்தைச் சுமக்கிறார். தமிழாசிரியராக நடித்திருக்கும் அவரது முழியும...