
2K லவ் ஸ்டோரி – மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாகப் பேசுகிறது
சிட்டி லைட் பிக்சர்ல், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ்ஸ்டோரி” ஆகும். க்ரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, “சுசீந்திரன் அண்ணாவின் முதல் படத்தில் பாடல் எழுதினேன். இடையில் பல காலம் எழுதவில்லை, இப்போது இப்படத்தில் பாடல் எழுதியுள்ளேன். எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும் மிகத் தன்மையான மனிதனாக இமான் இருக்கிறார். இதில் எல்லாப் பாடல்களும் நான் எழுதியுள்ளேன். ஒரு பாடல் மட்டும் யுகபாரதி எழுதியுள்ளார். மனித மனங்களின் உணர்வுகளை மிக ஆழமாகப் பேசுகிறது இந்த ட்ரெய்லர்” என்றார்.
நடிகை வினோதினி வைத்தியநாதன், “இ...