Shadow

Tag: காவியத்தலைவன்

காவியத் தலைவன் விமர்சனம்

காவியத் தலைவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரவானைத் தொடர்ந்து வசந்த பாலனிடமிருந்து மீண்டுமொரு பீரியட் ஃப்லிம். ஸ்ரீலஸ்ரீ பாலசண்முகானந்தா நாடக சபாவை நடத்தி வருகிறார் சிவதாஸ் ஸ்வாமிகள். அவரது சீடர்களில் ஒருவனான கோமதி நாயகம் ராஜபார்ட்டாக நடிக்க ஆசைப்படுகிறான். ஆனால் மற்றொரு சீடரான காளியப்பனுக்கு அந்த வாய்ப்பை வழங்குகிறார் சிவதாஸ் ஸ்வாமிகள். பொறாமைக் கனல் கொழுந்து விட்டெறியும் கோமதி நாயகம், சதித் திட்டம் தீட்டி காளியப்பனை ஓரங்கட்டுகிறான். பின் என்னாகிறது என்பதுதான் கதை. படத்தின் நாயகன் காளியப்ப பாகவதராக சித்தார்த். சூரபத்மனாக நடித்துக் காட்டும்போது அசத்துகிறார். இரண்டாம் பாதியில், இதுநாள் வரை பார்த்துப் பழகிய சித்தார்த்தாகவே திரையில் தெரிகிறார். மலையாள நெடியுடன் வசனம் பேசும் ப்ரித்விராஜ், கோமதி நாயகமாக தன் பொறாமையையும் வன்மத்தையும் கண்களில் தேக்கியபடி படம் முழுவதும் வருகிறார். சித்தார்த் போலில்லாமல் கடைசி வரை கோமதி நாயகமாகவே தெரிகி...
எல்லாப் புகழும் ரஹ்மான் ஒருவருக்கே!

எல்லாப் புகழும் ரஹ்மான் ஒருவருக்கே!

சினிமா, திரைச் செய்தி
“காவியத்தலைவன் படத்தில் இசை என்பது மிக முக்கியமான விஷயம். வழக்கமா படத்தில் 6 பாட்டு இருக்கணும் என்பதற்காகவே பாடல்கள் வைப்பாங்க. ஆனா இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாகவே இசை இருக்கு. இந்தப் படத்தை ‘ரியல் மியூசிக்கல் ஃபிலிம்’னு சொல்லலாம். கால் நூற்றாண்டு காலமாக கேட்ட ரஹ்மான் இசையை இப்படத்தில் கேட்க மாட்டீங்க. அற்புதமான இசைக்காக ரொம்ப உழைச்சிருக்கார்” என்றார் நாசர். “நான் சக்கரக்கட்டி படத்தில் நடிக்கவே ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் பண்றார் என்பதுதான் காரணம். ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக்கில் ஒரு படம் பண்றதே லைஃப் டைம் அச்சீவ்மென்ட். எனக்கு இது அவருடன் இரண்டாவது படம். நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எனக்கு இந்தப் படத்தில் சேலஞ்சிங் ரோல். ஒரு நடிகைக்கு இப்படியொரு பெர்ஃபாமன்ஸ் ஓரியன்ட்டட் ரோல் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்” என்றார் வேதிகா. “நான் சித்தார்த்தைப் பார்த்து அவர் வீட்டில் கதை சொ...
“என் கனவு ட்ரீம்லாம் சினிமாதான்” – வசந்தபாலன்

“என் கனவு ட்ரீம்லாம் சினிமாதான்” – வசந்தபாலன்

சினிமா, திரைச் செய்தி
“எனக்கு டெர்ரரிஸ்ட்னு பெயர் வந்துடுச்சு. நான் 92 இல் சின்மாக்கு வந்தேன். அதிலிருந்து என் வாழ்க்கை, கனவு, ட்ரீம் எல்லாம் சினிமாதான். வெயில் சொன்ன டைம்ல எடுத்து முடிச்சேன். ‘அங்காடித் தெரு’ - ரங்கநாதன் தெருல ஷூட்டிங், புது நடிகர் வச்சு எடுக்கிறதென ஒரு வலியும் வேதனையும் கடந்து எடுத்து முடிச்சோம். ‘அரவான்’ படத்துல பாத்திரங்களுக்கு பச்ச குத்தி விக் வச்சு வெறும் காலுல ‘ஹாட் சன்’ல நடக்க வச்சு ஸ்பாட்டுக்குக் கொண்டு வரவே 11 ஆகிடும். இப்படி நல்ல சினிமா எடுக்கணுங்கிற வேட்கையிலதான் எனக்கு டெர்ரரிஸ்ட் என்ற பெயர் வந்துடுச்சு. ஆனா இந்தப் படத்தில் எனக்குக் கிடைச்ச அனுபவம் முற்றிலும் புதுசு. நடிகர்கள் பற்றி, சினிமா பற்றி எனக்கிருந்த கணிப்பை முற்றிலும் மாற்றிவிட்டது. அங்காடித் தெரு டப்பிங்கிற்காக திருநெல்வேலி போயிருந்தேன். அங்க நானும் ஜெயமோகனும் லிட்ரேச்சர் சம்பந்தமாக ரொம்ப நேரம் பேசிட்டிருந்தோம். அவ்வை ...
நாசர் தீட்டிய சதித்திட்டம்

நாசர் தீட்டிய சதித்திட்டம்

சினிமா, திரைச் செய்தி
“முதல்நாள் நானு, சித்தார்த், ப்ரித்வி ராஜ்லாம் நின்னு பேசிட்டிருக்கோம். வசந்தபாலனுக்கு ஒரே டென்ஷன். 'என்ன சார் எப்ப பார்த்தாலும் பேசிட்டே இருக்கீங்க. எனக்கு புது நடிகர்களை வச்சு படமெடுத்ட்ஹே பழக்கமாயிடுச்சு. அவங்க சொல்றதுக்கெல்லாம் கேட்பாங்க. நீங்க ஒண்ணுமே கேட்க மாட்டுறீங்களே!?' எனக் கேட்டார். என்னடா இவர் இப்படிச் சொல்றார்னு, ‘என்ன சித்தார்த்.. நாம படத்தைப் பற்றித் தான பேசிட்டிருந்தோம்?’னு கேட்டேன். சித்தார்த், ‘இல்ல சார் நாம் ப்ரூவ் பண்ணணும்’ என்றார். நானும், பிரித்வியும் ஏறக்குறைய சதித்திட்டம் தீட்டுற மாதிரிதான் தீட்டணும். நான் சித்தார்த் ப்ரித்வி மூவரும் பிளான் பண்ணோம். சதித்திட்டமே கூடச் சொல்லலாம். எங்க சதித் திட்டம் மிகப் பெரிய வெற்றியைத் தந்திருக்கு” என ‘காவியத்தலைவன்’ படம் நிறைவாக வந்திருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் நாசர். இந்தப் படத்தில் எனக்கு வேலையே இல்லாமப் போயிடுச்ச...