Shadow

Tag: கிங்ஸ்லி

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வடிவேலின் கம்-பேக் படமாக இருக்கும் என எதிர்பார்ப்பினை உருவாக்கிய படம். த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என கதை சொல்லி பில்டப்பை ஏத்தும், தலைநகரம் படத்து நாய்சேகருக்கும், இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இது முற்றிலும் மாறுபட்ட கதையிலும் வேடத்திலும் வடிவேலு தோன்றியூள்ளார். பணக்காரர்களின் நாய்களைத் திருடி, அவர்களிடம் பணம் பெற்றுக் கோண்டு நாயை ஒப்படைக்கும் திருடன் சேகர். தாஸ் எனும் தாதாவின் நாயைத் தெரியாமல் திருடி விட, சேகர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். அதே சமயம், சேகரின் குடும்பத்திலிருந்து திருடப்பட்ட நாய் பற்றித் தெரிய வர, அதை மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் சேகர். நாயை மீட்டானா, தாஸிடமிருந்து தப்பினானா என்பதே படத்தின்கதை. ஆன்ந்த்ராஜ், முனீஷ்காந்த், ராவ் ரமேஷ், லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்க்ஸ்லி, சிவாங்கி, ஷிவானி, மனோபாலா, சஞ்சனா சிங், லொள்ளு சபா சேஷு,...
காரி – தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இடைவேளைக் காட்சி

காரி – தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இடைவேளைக் காட்சி

சினிமா, திரைச் செய்தி
ப்ரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 25ஆம் தேதி காரி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் நாகிநீடு, “இந்தப் படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக மாறிமாறி நடைபெற்றது. எனக்கு சரியான நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் இருந்தது. அதைப் புரிந்து கொண்ட சசிகுமார் எனக்குப் படம் முழுவதும் தனது ஆதரவைக் கொடுத்தார். என்ன...
A1 விமர்சனம்

A1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐயங்கார் பெண்ணான திவ்யா, சரவணனை ஐயங்கார் பையனென நினைத்துக் காதலிக்கிறார். சரவணனோ லோக்கல் பையன். திவ்யாவின் அப்பாவோ இக்காதலை ஒத்துக் கொள்ளவில்லை. நாயகனின் நண்பர்கள் இணைந்து நாயகியின் தந்தையைக் கொன்றுவிடுகின்றனர். பின், சரவணன் - திவ்யா காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. என்ன தான் நகைச்சுவைப் படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பது அடிப்படை விதி என்றாலும், காதல் வர இவ்வளவு மொக்கையான காரணத்தை வைத்திருக்கவேண்டாம் இயக்குநர் K.ஜான்சன். சண்டை போடும் ஐயங்கார் பையன் என்பதால் நாயகிக்கும்; முதல் முறை பார்த்ததுமே காதலைச் சொல்லி, அதை உறுதிபடுத்த உதட்டில் முத்தமே கொடுத்துவிடுவதால் நாயகனுக்கும் காதல் வந்துவிடுகிறதாம். ஷ்ஷ்ப்ப்பாஆஆ.. நாயகனின் தந்தை லோகுவாக எம்.எஸ்.பாஸ்கர் செமயாக நடித்துள்ளார். கதாபாத்திரங்களின் டைமிங் டயலாக்கால், காமெடியில் ஸ்கோர் செய்யும் படம் இது. ஆனால் தேர்ந்த நடிப்பையும், உடற்ம...