Shadow

Tag: கிங் விஸ்வா

வரலாற்றுப் பயணத்தின் தொடக்கம்

வரலாற்றுப் பயணத்தின் தொடக்கம்

கட்டுரை, புத்தகம்
இன்று தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். ஏனென்றால், ஆனந்த விகடன் நிறுவனத்தின் புதிய இம்ப்ரிண்ட் ஆன “விகடன் கிராஃபிக்ஸ்” இன்று அறிமுகம் ஆகிறது. அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்தப் புத்தகம் நிச்சயமாக வாசிப்பில் ஒரு புதிய பாதையை உருவாக்கும் என்று நம்பலாம். ‘காவல் கோட்டம்’ நாவலிற்காக சாகித்திய அக்காதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு சு. வெங்கடேசன் அவர்களின் கதைக்கு, வண்ணமயமாக உயிரூட்டி இருக்கிறார் கோவையைச் சேர்ந்த ஓவியரான பாலசண்முகம்.காலத்தால் அழிக்க முடியாத புகழைப் பெற்ற மாறவர்மன் குலசேகர பாண்டியன். அவனுக்கு இரண்டு மனைவிகள். முறையே இரண்டு மகன்கள். மூத்தவன் சுந்தர பாண்டியன் இருக்க, இளையவன் வீர பாண்டியனே சிறந்தவன் என்று தந்தை கருத, அதனால் மூத்த மனைவியின் மகன் செய்யும் சதித் திட்டங்கள் நாட்டையே நிலைகுலைய வைக்கிற அளவிற்குப் போகிறது. அந்த சதித் திட்டங்களை எல...
மிதக்கும் சொர்க்கம்

மிதக்கும் சொர்க்கம்

கட்டுரை, புத்தகம்
ஓர் உல்லாசக்கப்பல் பயணத்தைப் பற்றிய பயணநூல் என்பதே ஆர்வத்தைக் கிளறுவதாக இருந்தது. அதையும் அந்தப் புத்தகத்தை எழுதியவர் ஒரு பெண் விஞ்ஞானி என்பது புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டியது. மன்மதன் அம்பு படத்தில் கமல், த்ரிஷா பயணிக்கும் க்ரூஸ் வகை கப்பலைச் சேர்ந்ததுதான் இந்நாவலின் உல்லாசக்கப்பலும்! புத்தகத்தை அறிமுகம் செய்த யுவகிருஷ்ணா, தமிழில் வந்துள்ள பயணநூல்கள் பற்றிய ஒரு பார்வையை அளித்தார். 1940 களிலேயே, ஏ.கே.செட்டியார், தனியொருவராக இருந்து அச்சு இயந்திரத்தில் எழுத்துகளைக் கோர்த்து, தனது பயண அனுபவங்களை புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். தமிழின் பயண நூல்களுக்கு அவரே முன்னாடியெனச் சொன்னார். எழுத்தாளர் சல்மாதான் கிருத்திகா எழுதுவதற்கே காரணமாக இருந்துள்ளார். அவர் புத்தகத்தைப் பற்றி குறிப்பிடும்போது, "பெண்களால் மட்டுமே சிலவற்றை எழுத முடியுமென்பதற்கு கிருத்திகாவின் இந்தப் புத்தகமும் சான்...
யாவருக்குமான காமிக்ஸ்!

யாவருக்குமான காமிக்ஸ்!

கட்டுரை, புத்தகம்
பொம்மைப் படங்கள் என கொஞ்சம் கேலியாக அழைக்கப்படும் சித்திரக் கதைகள் குழந்தைகளுக்கானது மட்டுமா? “ஆம்” என்பவரே இங்கு அதிகம். ஆனால் அப்படியில்லவே இல்லை, காமிக்ஸ் என்பது அனைத்து வயதினருக்குமானது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக “கிராபிக் நாவல்கள்” பற்றியதொரு கலந்துரையாடலை யாவரும்.காம், டிஸ்கவரி புக் பேலஸ், தமிழ் காமிக்ஸ் உலகம் ஆகிய மூவரும் இணைந்து நடத்தினர்.“ஃப்ரான்ஸில் 95% பேர் காமிக்ஸை விரும்பிப் படிக்கிறாங்க. லேண்ட் மார்க் போல, அங்க ஒரு 6 மாடிக் கட்டடம் முழுவதும் காமிக்ஸ்க்கு என தனியாக வச்சிருக்காங்க. உள்ள போனீங்கன்னா, காமிக்ஸ் படிச்சு தனியாகச் சிரித்துக் கொண்டிருக்கும் பெண்களைப் பார்க்கலாம். அந்த இடத்துக்குப் போனாலே மனம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அதே போல், ஜப்பானிலும் 95% பேர் மாங்கா (ஜப்பானிய மொழியில் காமிக்ஸ்)-க்கு அடிமைகள். நம்மூர்ல எப்படி வாஷிங் மெஷின்க்கு பக்கத்தில் ந...