Shadow

Tag: கிருத்திகா

மிதக்கும் சொர்க்கம்

மிதக்கும் சொர்க்கம்

கட்டுரை, புத்தகம்
ஓர் உல்லாசக்கப்பல் பயணத்தைப் பற்றிய பயணநூல் என்பதே ஆர்வத்தைக் கிளறுவதாக இருந்தது. அதையும் அந்தப் புத்தகத்தை எழுதியவர் ஒரு பெண் விஞ்ஞானி என்பது புத்தகத்தைப் படிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டியது. மன்மதன் அம்பு படத்தில் கமல், த்ரிஷா பயணிக்கும் க்ரூஸ் வகை கப்பலைச் சேர்ந்ததுதான் இந்நாவலின் உல்லாசக்கப்பலும்! புத்தகத்தை அறிமுகம் செய்த யுவகிருஷ்ணா, தமிழில் வந்துள்ள பயணநூல்கள் பற்றிய ஒரு பார்வையை அளித்தார். 1940 களிலேயே, ஏ.கே.செட்டியார், தனியொருவராக இருந்து அச்சு இயந்திரத்தில் எழுத்துகளைக் கோர்த்து, தனது பயண அனுபவங்களை புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். தமிழின் பயண நூல்களுக்கு அவரே முன்னாடியெனச் சொன்னார். எழுத்தாளர் சல்மாதான் கிருத்திகா எழுதுவதற்கே காரணமாக இருந்துள்ளார். அவர் புத்தகத்தைப் பற்றி குறிப்பிடும்போது, "பெண்களால் மட்டுமே சிலவற்றை எழுத முடியுமென்பதற்கு கிருத்திகாவின் இந்தப் புத்தகமும் சான்...