‘காளிதாசன் சாகுந்தலா’ பாடல் – விஜயானந்த்
கர்நாடகத்தைச் சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவித் தயாராகியிருக்கும் படம் 'விஜயானந்த்' ஆகும். 'ட்ரங்க்' எனும் ஹாரர் த்ரில்லர் படத்தை இயக்கிய இயக்குநர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் 'ட்ரங்க்' படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி. ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்குக் கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு வசனத்தையும், பாடல்களையும் பாடலாசிரியர் மதுரகவி எழுதியிருக்கிறார். 'ஸ்கெட்ச்' படப் புகழ் ரவி வர்மா சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார். சுயசரிதை படைப்பாகத் த...