Shadow

Tag: கீர்த்தி கர்பந்தா

புரூஸ் லீ விமர்சனம்

புரூஸ் லீ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகனின் பெயர் ஜெமினி கணேசன். பயங்கரமான பயந்தாங்கொள்ளி. திரையில் ஒரிஜினல் புரூஸ் லீ நடித்த படம் பார்த்தால் மட்டும் சிறுவன் ஜெமினி கணேசனுக்கு லேசாகத் தைரியம் வர மாதிரி இருக்கே 'அடடே..!' என அவனது அம்மா புரூஸ் லீ எனப் பெயர் அழைக்கிறார். ஆனாலும் நாயகனுக்கு தைரியம் மட்டும் வந்தபாடில்லை. புரூஸ் லீக்கு தைரியம் வராவிட்டால் என்ன? சரோஜா தேவி மீது காதல் வந்து விடுகிறது. முகத்திற்கு பெளடர் போட்டுக் கொண்டு பாடல்களுக்கு நடனமாடும் சரோஜா இல்லை, பயந்து நடுங்கும் நாயகனை நெஞ்சோடு அணைத்து ஆறுதல் சொல்லும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . படம் தொடங்கும் பொழுது வரும் டிஸ்க்ளெயிமர் சுவாரசியத்தைக் கூட்டுவதாக உள்ளது. 'சில படங்களில் இருந்து திருடியும் உள்ளோம்' என்பதே அது. அந்தச் சுவாரசியத்தை அதிகப்படுத்தும் விதமாக முனீஷ்காந்த் படத்தில் வில்லனாக வருகிறார். இது சீரியசான ஸ்பூஃப் மூவியா அல்லது முழு ...