Shadow

Tag: குக்கூ

குக்கூ விமர்சனம்

குக்கூ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எளிய மனிதர்களின் வாழ்க்கை பற்றிய படம் தமிழில் அரிதினும் அரிதாகவே வருகிறது. அப்படியொரு அரிதான படம் குக்கூ. பார்வையற்ற இருவருக்குள் மலரும் கலர்ஃபுல்லான காதல்தான் படத்தின் கரு. ‘அட்டகத்தி’ தினேஷ் தமிழாகக் கலக்கியுள்ளார். மூன்று மாதம் பார்வையற்றவர்களுடன் உடனிருந்து அவர்களது உடல்மொழியை அவதானித்து அப்படியே திரையில் பிரதிபலித்துள்ளார். இத்தகைய படத்தில் நடிப்பதைவிட வேறென்ன பேறு ஒரு நடிகருக்குக் கிடைத்துவிட முடியும்? சுதந்திரக்கொடியாக மாளவிகா. நமக்கு வேண்டப்பட்ட ஒரு நபர் போல், அவரை மிக நெருக்கமாக உணரச் செய்கிறது அவரது பொலிவான முகம். ஒரு படத்தின் கதையில் நாயகி முக்கியத்துவம் பெறுவதே அதிசயம். அதிலும் நாயகனுக்கு நிகராக நாயகிக்கும் நடிக்க காட்சிகள் அமையப்பெற்றால்? 99% நாயகிகளுக்குக் கிடைக்காத அரிய வாய்ப்பினை மிகக் கச்சிதமாக மாளவிகா பயன்படுத்தி தன்னை நிரூபித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். “அண்ணா.. ...
குக்கூ – கோடையில் மழை போல்!

குக்கூ – கோடையில் மழை போல்!

சினிமா, திரைத் துளி
ஃபாக்ஸ் ஸ்டார் மற்றும் நெக்ஸ்ட் பிக்ஃபிலிம் இணைந்து தயாரித்து இருக்கும் ‘குக்கூ’ என்ற திரைப்படத்திற்கு தணிக்கைதுறை ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அட்டகத்தி புகழ் தினேஷ் புதுமுகம் மாளவிகா இணைந்து நடித்திற்கும் திரைப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் உதவியாளர் ராஜூமுருகன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில், P.K.வர்மா ஒளிப்பதிவில், சண்முகம் வேலுசாமி படத்தொகுப்பில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது. தணிக்கைத்துறை அதிகாரிகளால் பாராட்டப்பட்ட இத்திரைப்படம் ‘கோடையில மழ போல’ மார்ச் 21 – ஆம் தேதி திரைக்கு வருகிறது....
குக்கூ – இசை வெளியீட்டு விழா

குக்கூ – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
பாலுமகேந்திராவின் குரலுடன் குக்கூ இசை வெளியீட்டு விழா தொடங்கியது. அந்த மகா கலைஞருக்கான மரியாதையை வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று செலுத்தினர். “முருகா.. உன் கனவுகள் நனவாக என்றுமிருப்பேன் துணையாக” என விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் சிம்பிளாகத் தொடங்கி வைத்தார். குக்கூ பட இயக்குநர் ராஜூமுருகனின் முதல் குரு இவர். கண்ணன் கொடுத்த தைரியமும் நம்பிக்கையும்தான், ‘தன்னால் முடியுமா?’ என சந்தேகித்த ராஜூமுருகனை ‘வட்டியும் முதலும்’ எழுதவைத்தது. ராஜூமுருகனின் இரண்டாவது குரு, சினிமா தொழிலைக் கற்றுக் கொடுத்த லிங்குசாமி. தன்னை பேட்டியெடுக்க வந்த ராஜூமுருகனை லிங்குசாமியே விரும்பி , ‘என்னிடம் அசிஸ்டென்ட்டாகச் சேர்த்து கொள்கிறாயா?” எனக் கேட்டுள்ளார். “ஆனால் இவன் என்னைப் போன்ற இயக்குநர் இல்லை. பாலா, சேரன், ‘அழகி’ படம் எடுத்த பொழுதிருந்த தங்கர் பச்சான் போல ஒரு இயக்குநர்” என்றார். “இரண்டு கருத்த இளைஞர்கள், க...
“குக்கூ” இசை – ‘வட்டியும் முதலும்’ ராஜூ முருகன்

“குக்கூ” இசை – ‘வட்டியும் முதலும்’ ராஜூ முருகன்

சினிமா, திரைத் துளி
இந்தப் புகைப்படத்தில் கிராமஃபோனுக்குப் பக்கத்தில் நிற்கிற முருகேசண்ணனை நீங்கள் பார்க்க வேண்டும். குழந்தை மாதிரி திறக்காத கண்களும் நம்மைத் திறந்து வைக்கிற சிரிப்புமாக இருக்கிற முருகேசண்ணன். மூர்மார்க்கெட்டில் கடை நடத்துகிறார். இந்தக் கதையை எனக்கு பரிசளித்தவர்களில் அவரும் ஒருவர். படத்தில் ஒரு மாண்டேஜில் தோன்றுவதற்காக அவரது மனைவியையும் அழைத்தேன். காட்சி எடுப்பதற்கு முன்பாக மனைவியின் கைகளைத் தடவிப் பார்த்தவர், “ஏய்.. வளையல் போடல..” என்றபடி வளையலை வாங்கி மாட்டிவிட்டார். அது நம்மால் யோசிக்கவே முடியாத அன்பின் எட்டாவது வண்ணம்! மாதவரத்தில் பார்வையற்றவர்களுக்கான பயிற்சி வகுப்பில் இளங்கோ. “சார்… ஒங்க முன்னாடி தம்மடிச்சா மரியாத இல்ல… திரும்பி நின்னுக்குங்க சார்…” எனச் சிரித்தான். கழுத்து நரம்பு இழுக்க, இளையராஜாவாகவே மாறி, ‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது…’ பாடினான். அவனது சிரிப்பை நீங்கள் ஒருமுறை பா...