பெற்றோர்களே இது உங்களுக்குத்தான்..!
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளைப் புரிந்து கொள்வது என்பது சவாலான விஷயமே! ஓடி ஓடிச் சம்பாதிக்கும் நாம், நமது குழந்தைகளின் மனதைப் புரிய ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், குழந்தைகள் சிறுவயது முதல் தங்கள் முக பாவனை, நடை, பேச்சு, செயல்களின் மூலம் கருத்துக்களைப் பிரதிபலிக்கிறார்கள்.
விருப்பு, வெறுப்பு, செயல், புரிதல் தன்மை முதலியன குழந்தைகளைப் பொருத்து மாறுபடும். உதாரணத்திற்கு, ஒரு சில குழந்தைகளுக்கு விளையாடப் பிடிக்கலாம்; அவர்களைக் கடிந்து வேறு ஒரு செயலைச் செய்யத் தூண்டும்போது மன அழுத்தத்தை விதைத்து அவர்களது சிறிய ஆசையையும் தேக்கி வைக்கிறோம். நம் அதிகாரத்தை உபயோகித்து அவர்களது ஆசைகளை நிராகரிக்கும்போது, நம் மேல் ஒரு வெறுப்பு, பயம் வர நாமே காரணமாகிறோம்.
அதிகாரத் தோரணையை விடுத்து, அன்புடன் அவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுக்கும்போது குழந்தைகள் ஏற்றுக் கொள்வார்கள். வளர...