
மின்னல் முரளி விமர்சனம்
இந்தியாவிற்கு சூப்பர் ஹீரோ தேவையா?
எழுநூறு வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்கிற முக்கோண கிரக அமைப்பில் ஏற்படும் மின்னல் தாக்கி, குறுக்கன்மூலா எனும் கிராமத்தில் இருக்கும் ஜெய்ஸன் வர்கீஸ், ஷிபு ஆகிய இருவருக்கு சில அதிசய சக்திகள் கிடைக்கின்றன. குறுக்கன்மூலா கிராமத்திற்கு அதனால் என்ன பாதிப்புகள் நேருகின்றன என்பதே பட்த்தின் கதை.
எதார்த்த படங்களுக்குப் பெயர் போனது மல்லுவுட். அங்கிருந்து ஒரு சூப்பர் ஹீரோ படமென்பதே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தங்களது பாணியில் இருந்து பெரிதும் விளங்காமல் சூப்பர் ஹீரோ படத்தைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவைப் போல் உலகையே அழிக்கத் துடிக்கும் வில்லன்கள் இல்லாத கிராமத்தில் யார் வில்லன்? சக்தி கிடைத்த இருவரில் ஒருவர் வில்லன், மற்றொருவர் ஹீரோ என்று சேஃப் ஜோன்க்குள் கதையைக் கட்டமைத்துள்ளனர்.
மனித மனம் மிகவும் சிக்கலானது. கிராமத்தையே அழிக்க நினைக்கும் ஷிபுவிற்...