மாமனிதன் விமர்சனம்
தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக இயக்குநர் சீனு ராமசாமியும், விஜய் சேதுபதியும் இணைந்துள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநரான ராதாகிருஷ்ணன், குடும்பத்தைக் கைகழுவி, வீட்டை விட்டு ஓடித் தலைமறைவாகிறார். ஏன் ஓடினார், எங்கே ஓடினார், மீண்டும் குடும்பத்துடன் இணைந்தாரா இல்லையா என்பதுதான் குடும்பத்தின் கதை.
ராதாகிருஷ்ணனாக விஜய்சேதுபதியும், அவரது மனைவியாக காயத்ரியும் நடித்துள்ளனர். படத்தின் தொடக்கம், விஜய் சேதுபதி – காயத்ரி இணையின் அழகான கூட்டினைக் காட்டி, அவர்கள் இருவரும் எப்படிக் காதலித்து மணம் புரிந்தார்கள் என்ற அத்தியாயமே! விஜய்சேதுபதியின் மகளாக நடித்துள்ள மானஷ்வி வரும் ஃப்ரேம்கள் அனைத்துமே கவிதை. மிக யதார்த்தமாக, மனதைக் கொள்ளை கொள்ளும் அந்த அத்தியாயத்திற்குப் பிறகு, ரியல் எஸ்டேட் முதலாளியுடன் விஜய் சேதுபதி பார்ட்னர்ஷிப் போடுவதில் இருந்து, படம் ஒரு சீர...