குற்றப்பரம்பரை – தலைப்பும் கதையும் வேறு
இயக்குநர் பாரதிராஜாவின் கனவுப்படமான 'குற்றப்பரம்பரை'க்கும், பாலாவின் அடுத்த படத்தின் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், தான் மீண்டும் மீண்டும் சீண்டப்படுவதாக ஆவேசமாக உள்ளார் இயக்குநர் பாலா.
வேல ராமமூர்த்தியின் நாவலைப் படமாக்குகிறார் பாலா என்ற செய்தி வெளியானது. பாலாவைக் கவர்ந்த அந்த நாவலின் பெயர் 'கூட்டாஞ்சோறு'. விகடனில் தொடராக வெளிவந்தது. அந்நாவலில் இருந்து ஒரு களத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு, தானும் வேல ராமமூர்த்தியும் திரைக்கதை அமைத்துள்ளதாகக் கூறுகிறார் பாலா. சென்ற ஆண்டு, கூட்டாஞ்சோறு நாவலை "குற்றப்பரம்பரை" எனப் பெயர் மாற்றி 'டிஸ்கவரி புக் பேலஸ்' எனும் பதிப்பகம் வெளியிட்டது. இந்தப் பெயர் குழப்பமே அனைத்துக்கும் ஆதாரச் சுழி. இதனை பாலா, பாரதிராஜாவிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
அந்நிலையில், "பாலா, என் எச்சிலைத் திங்க மாட்டான் என நம்புகிறேன்" என பாரதிராஜா பேட்டியளித்துள்ளார். மூத்த ...